Saturday, 2 November 2013

Tagged Under:

தீபாவளி லேகியம் செய்வது எப்படி?

By: ram On: 19:50
  • Share The Gag
  • தீபாவளி அன்று காலையில் எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பலகாரங்களை தின்பதால் தொண்டை கட்டு வரும். அதில்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த லேகியம் ரெடி பண்ண நேரமில்லாதவ்ர்கள் ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு கரண்டி எடுத்து பொடி செய்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆளுக்கு ஒன்று சாப்பிட தீபாவளி லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும்.


    nov 2 - deepavali lekiyam


    இனி தீபாவளி லேகியம் எப்படி செய்வது என்று பார்ப்போமா?


    தேவையானவை:


    தணியா : 4 கப்

    இஞ்சி : 200 கிராம்

    ஓமம் : 100 கிராம்


    சுக்கு, மிளகு, திப்பிலி : தலா 10 கிராம்

    வெல்லம் 100 கிராம்: (துருவிக் கொள்ளவும்)

    பொடித்த ஏலக்காய் 5 கிராம்: (விருப்பப்பட்டால்)

    நெய் : 1/4 கப்

    செய்முறை:

    * தணியாவையும், சீரகத்தையும் நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    * இளசாக இருக்கும் இஞ்சியாகப் பார்த்து வாங்கவும். இஞ்சியை நன்கு சுத்தம் செய்து தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    * மிக்சியில் அல்லது அம்மியில் இஞ்சியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    * ஊற வைத்த தணியாவையும், சீரகத்தையும் இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும்.

    * கலவை நன்றாக அரைந்து விழுதாக ஆனதும் அதில் வெல்லத்தை பொடி செய்து கலக்கவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து விழுதை அதில் போட்டு நன்கு கிளறவும்.

    * பின்னர் அதில் நெய்யை விட்டு கிளறிக் கொண்டே இருங்கள். லேகியம் பதத்திற்கு வந்ததும் இறக்கி உலர்ந்த பாத்திரத்தில் பத்திரப்படுத்துங்கள்.

    * இதனை அனைவரும் சாப்பிடலாம். பலகாரங்களால் வயிற்றுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை இந்த லேகியமே சரி செய்து விடும்.

    0 comments:

    Post a Comment