Monday, 18 November 2013

Tagged Under: , , , ,

அதிசயங்களும், மர்மங்களும் கொட்டிக்கிடக்கும் இடங்கள்!

By: ram On: 12:23
  • Share The Gag
  • இந்தியாவில் மர்மங்களுக்கும், அதிசயங்களுக்கும் எந்த குறைச்சலும் இல்லை. தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா? தாஜ் மஹாலை கட்டியது யார்? என்று இன்னும் விடை அறியப்படாத கேள்விகள் எத்தனையோ தொக்கி நிற்கின்றன.

    அந்த வகையில் காற்றில் மிதக்கும் கல், எலும்புக்கூடுகள் நிறைந்த ஏரி, பறவைகள் தற்கொலை செய்யும் இடம், வீடுகளுக்கு கதவுகளே இல்லாத கிராமம் என்று உங்களுக்காக அதிசயமான மர்மங்களும், மர்மமான அதிசயங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.


    மேக்னடிக் ஹில்

    உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம்.
    ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம்.



    இந்த மேக்னடிக் ஹில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.


    கொடிஞ்சி இரட்டையர் கிராமம்

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடிஞ்சி கிராமம் இரட்டையர்கள் கிராமம் என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது.


    இந்த கிராமத்தில் 2008-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பல சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. அதாவது முதலில் 100 இரட்டையர்கள் என்று கணக்கிடப்பட்டு, 200 இரட்டையர்கள் என்றாகி தற்போது 400 ஜோடி இரட்டையர்களை இந்த கிராமம் கொண்டிருக்கிறது.

    அதுவும் உலக அளவில் இந்தியா இரட்டையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் இந்த கிராமம் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது.


    காற்றில் மிதக்கும் கல்

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஷிவாபூர் என்ற இடத்தில் இந்த காற்றில் மிதக்கும் கல் காணப்படுகிறது. இந்தக் கல்லை 11 பேர் தங்கள் விரல்களால் தொட்டு "கம்மார் அலி தர்வேஷ்" என்று சொன்னால் காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுமாம்.

    200 கிலோ எடை கொண்ட இந்தக் கல் காற்றில் மிதக்கும் என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்றாகவே இருந்து வருகிறது.

    எனினும் கம்மார் அலி என்ற அற்புத சக்தி படைத்த சூஃபி ஞானி இப்பகுதியில் வாழ்ந்ததாகவும், அவருடைய சக்தியால்தான் இந்தக் கல் காற்றில் மிதப்பதாகவும் உள்ளூர் மக்கள் நம்பி வருகின்றனர்.


    ரூப்குந்த் லேக்

    1942-ஆம் ஆண்டு உத்தரகண்ட்டின் உறைந்த ஏரியான ரூப்குந்த் லேக்கில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் காட்டிலாக்க அதிகாரி ஏரி முழுக்க எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

    அதோடு அந்த ஆண்டு கோடை காலத்தில் உருகிய ஏரி இன்னுமின்னும் மனித எலும்புக்கூடுகளை கக்கிக்கொண்டிருந்தது. முதலில் இரண்டாம் உலகப்போரில் இந்தியா நோக்கி வந்த ஜப்பானிய சிப்பாய்களின் எலும்புக்கூடுகள் இவையென்று சொல்லப்பட்டன.

    ஆனால் அறிவியல் அறிஞர்கள் இந்த எலும்புக்கூடுகள் 9-ஆம் நூற்றாண்டில் இறந்த இந்திய பழங்குடியினரின் கூடுகள் என்று தற்போது கண்டுபிடித்துள்ளனர்.


    பறவைகள் தற்கொலை செய்யும் இடம்!

    அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவத்தில் அமைந்திருக்கும் ஜதிங்கா எனும் கிராமம் பறவைகளின் தற்கொலை பூமியாக மாறி வருகிறது.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.


    அதாவது இந்த பருவத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரில் உள்ள காந்தப் பண்புகள் மாறி அது பறவைகளின் உடலியல் இயக்கங்களை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது என்ற ஒருசாரார் நம்புகின்றனர்.

    அதேபோல பறவைகள் கூடு அதிவேக காற்றால் சிதறடிக்கப்பட்டு பறவைகளை ஒரு ஒளியை நோக்கி திருப்பிவிட்டு மூங்கில் கம்புகளை கொண்டு பழங்குடியின மக்கள்தான் அடித்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


    ஷனி ஷிங்க்னாபூர்

    ஷிர்டியிலிருந்து 73 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஷனி ஷிங்க்னாபூர் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாதாம்! இங்குள்ள சனி பகவான் கோயிலில் வீற்றிருக்கும் சனீஸ்வரரே தங்கள் வீடு மற்றும் உடைமைகளை திருட்டிலிருந்து காத்து வருவதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.

    திருட்டில் ஈடுபடுபவர்கள் சனீஸ்வரரின் சக்தியால் அன்றைய தினமே கண் பார்வை பறிபோய் குருடாகி விடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்குள் ஆண் பக்தர்கள் மட்டுமே சென்று சனீஸ்வரரை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    0 comments:

    Post a Comment