Monday, 18 November 2013

Tagged Under: , , ,

டீ என்கிற தேநீர் – சூடு பறக்கும் சில உண்மைகள்!

By: ram On: 07:18
  • Share The Gag
  •  nov 17 - tea biscut.Mini

    பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பீகார் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஏழை குடும்பத்தில் பிறந்த நான், ரெயில்வே நிலையம் மற்றும் ஓடும் ரெயிலிலும் டீ விற்று இருக்கிறேன் என்று கூறினார்.இதைத் தொடந்து ஒரு கான்ஸ்டபிள் எஸ்.பி.யாக நடந்துகொள்ள முடியாது, டீ விற்றவரெல்லாம் பிரதமராக முடியாது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் கமான்ட் அடிக்க மோடி பதிலடியாக “டீ விற்றவரை நாட்டின் பிரதமராக கொண்டு வரலாமா வேண்டாமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நாட்டை விற்பதை காட்டிலும் டீ விற்பதே சிறந்தது.” என்றார் இப்படி சூடு பறக்கும் தேநீர் பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `

    கிமு 2737ல் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு புகழ்பெற்ற சீனக் கதையொன்றின்படி, வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகக் கருதப்படும் ஷென்னொங் என்னும் சீனப் பேரரசன், ஒரு நாள் சுடுநீர் அருந்திக்கொண்டு இருந்தானாம். அப்போது, காற்று வீச அருகிலிருந்த மரமொன்றிலிருந்து சில இலைகள் அவன் அருந்திக்கொண்டு இருந்த நீருள் விழுந்தனவாம். அப்போது நீரின் நிறம் மாறுவதை அவன் கவனித்தான். புதிய விடயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த பேரரசன், அந்த நீரில் ஒரு மிடறு அருந்தி அதன் வாசனையையும், உற்சாகம் தரும் இயல்பையும் அறிந்து வியந்தானாம்.

    இப்பேர்பட்ட தேநீரை தினமும் 3 கோப்பை குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முக்கியமாக தேநீர் குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.இப்படி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மேலும் தினமும் 2 கோப்பைக்கும அதிகமாக தேநீர் குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைகிறது என்றும தற்போதைய ஆய்வில் தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் தேநீர் குடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அளவுக்கு குறைவது தெரியவந்துள்ளது.

    அத்துட்ன் தேநீர் குடிப்பது கோப உணர்ச்சியையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ரத்தக்குழாய்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இதனால்தான் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

    இதையெல்லாம் விட மேலாக தேநீரில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. அந்நிலையில் மண்ணில் இருக்கும் ப்ளோரைடை `தேநீர்ச் செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக தேநீர் இருக்கிறது. பற்களில் `காரை’ படிவதையும் தேநீர் தடுக்கிறது.இனி பல்லை பாது காக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. தேநீர் குடித்தாலே போதும்.

    0 comments:

    Post a Comment