Friday, 29 November 2013

Tagged Under:

எப்படி சாப்பிட வேண்டும்?

By: ram On: 19:14
  • Share The Gag

  • ‘ஸ்பா’ என்று சொன்னதுமே இளசுகளின் புத்துணர்ச்சி மையம் என்று சட்டென்று சொல்லிவிடுவீர்கள். சென்னையில் பிரபல நட்சத்திர ஹோட்டல்களிலும், அழகு நிலையங்களிலும் ஸ்பா கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. சரி, இந்த ‘ஸ்பா’வை முதன்முதலில் இந்தியாவில்அறிமுகப்படுத்தியவர் யார் தெரியுமா?

    அசோக் கண்ணா. இவர்தான் ‘ஸ்பா’மகன்! அமெரிக்காவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர். பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் உயர் பொறுப்புகளில் இருந்தவர். 1999ம் ஆண்டு சுபயோக சுபதினத்தில் இமாசலப் பிரதேசத்தில் டெஸ்டினேஷன் ஸ்பாவான ‘ஆனந்தா’வை தொடங்கினார். உலகம் சுற்றும் வாலிபனாக பறந்துகொண்டிருக்கும் இவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

    ‘‘அவசர வாழ்க்கைக்குப் பழகிட்டோம். இந்த வேகத்துலேந்து சில நாட்களாவது தப்பிக்க முடியுமான்னு யோசிக்கிறோம் இல்லையா? அவங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ஸ்பா’. இதுவெறும் அழகு நிலையம், நீராவிக்குளியல், மசாஜ் மட்டும் கிடையாது. ஆயுர்வேத, அரோமாதெரபி சிகிச்சையோட நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்னு பஞ்ச பூதங்களின் சக்திகளை ஒருங்கிணைச்சு மனசையும், உடலையும் சுத்தப்படுத்தறதுதான் ‘ஸ்பா’.

     >> ஒவ்வொருவரும் உணவை எப்படி பிரிச்சு சாப்பிடனும்னு ஒரு வரைமுறை இருக்கு. அதன்படி செஞ்சா, உடலும் மனசும் ஆரோக்கியமா இருக்கும்.

     >> மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடவும்.

     >> ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

     >> ஒரு முறை சாப்பிட்டதும், அந்த உணவு நல்லா செரிமானம் ஆன பிறகுதான் அடுத்த வேலைக்கான உணவை எடுத்துக்கனும்.

     >> புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுவது அவசியம்.

     >> உப்பு அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏன்னா, கொழுப்புள்ள உணவை சாப்பிடனும்ங்கற ஆர்வத்தைத் தூண்டுவது உப்புதான்.

     >> கார்போஹைட்ரேட் அதிகமிருக்கிற அரிசி உணவை குறைச்சலா சாப்பிடவும்.

     >> பச்சைக் காய்கறிகளை தினமும் மூனு வேலையும் சாப்பிடறது நல்லது. நான்கைந்து பழங்களை ஒண்ணா சேர்த்து சாப்பிடக் கூடாது.

     >> உணவுக்கு அரை மணிநேரம் முன்னாடி பழம் சாப்பிடலாம். அல்லது உணவு சாப்பிட்ட 2 மணி நேரங்கள் கழிச்சு பழங்களை சாப்பிடலாம். ‘ஸ்பா’ எடுத்துக் கொள்ள பர்ஸ் தடுத்தாலும் இந்த வழிமுறைகளை உணவில் பின்பற்றலாமே?

    0 comments:

    Post a Comment