விருதுகளை ஏற்க மறுத்த சிலரைப்பற்றிய சுவையான தொகுப்பு இது :
பால் சார்த்தர் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை ஏற்க மறுத்தார். "எழுத்தாளன் ஓர் அமைப்பு. அவன் விருதுகளை ஏற்கக்கூடாது. மேற்கும், கிழக்கும் பிரிந்து சண்டைப்போட்டு கொண்டு இருக்கிறபொழுது மேற்கு வழங்குகிற ஒரு விருதை என்னால் ஏற்க முடியவில்லை. எழுத்தாளன் விருதுகளால் தான் ஒரு அமைப்பாக மாறுவதை அனுமதிக்கக்கூடாது. அது அவன் எழுத்தை பாதிக்கும். எனக்கும் முன்னரே நெரூடாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டு இருக்க வேண்டும்" என்றார் அவர்.
வியட்நாமில் அமைதியை கொண்டு வந்ததற்காக ஹென்றி கிஸ்ஸிங்கர் மற்றும் லா டேக் தோவுக்கு அமைதிக்கான நோபல் அறிவிக்கப்பட்டது. லா டேக் தோவோ, "எங்கே அமைதி திரும்பி இருக்கிறது? அமெரிக்கா தன்னுடைய வாக்கைக் காப்பாற்றவில்லை!" என்று அப்பரிசை ஏற்க மறுத்தார்.
மார்லன் பிராண்டோவுக்கு 'காட் பாதர்' படத்துக்கு ஆஸ்கர் விருது
அறிவிக்கப்பட்டபொழுது அதை பெற மறுத்து லிட்டில்ஃபெதர் எனும் பெண்ணை அனுப்பி வைத்தார். அமெரிக்காவின் பூர்வகுடிகளான அமெரிக்க இந்தியர்களை திரைப்படங்களில் எதிரிகளாக, தீயவர்களாக காட்டும் போக்கை ஹாலிவுட் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்வதாக அவர் அறிவித்தார். அதே படத்தின் நடிப்புக்கு கோல்டன் க்ளோப் அறிவிக்கப்பட்ட பொழுது அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் மற்றும் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விருதை ஏற்க மறுத்தார்.
சாகித்ய அகாடமி வழங்கிய விருதை ஏற்க மறுத்தார் அருந்ததி ராய்.
"அமெரிக்காவுக்கு அடிபணிந்து நாட்டை மேலும் ராணுவமயமாக்குதல், தாரளமயமாக்குதல், தொழிலாளிகளை ஒடுக்குதல் ஆகியவற்றால் இவ்விருதை ஏற்க மறுக்கிறேன்!" என்றார்.
அரசு அதிகாரிகள் விருதுகளை ஏற்க கூடாது என்று கே.சுப்ரமணியமும், என் துறை சார்ந்த விருதுகளை தவிர மற்ற அமைப்புகளின் விருதுகளைப் பெறமாட்டேன் என்று பத்திரிக்கையாளர் நிகில் சக்ரவர்த்தியும் பத்ம பூஷன் விருதை பெற மறுத்தார்கள். சீக்கிய பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து குஷ்வந்த் சிங்கும் இதே விருதை ஏற்க மறுத்தார். ஆனால், பின்னர் பத்ம விபூஷன் வழங்கப்பட்டதும் அதை ஏற்றுக்கொண்டார்.
மவுலானா அபுல் கலாம் ஆசாத்துக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட பொழுது அதை பெற மறுத்து ,"நானே தேர்வுக்குழுவில் இருக்கிறேன். எனக்கு எப்படி விருது?" என்று கேள்வி எழுப்பினார்.

0 comments:
Post a Comment