Saturday, 26 October 2013

Tagged Under:

சூர்யா மறுத்த படத்தில் கை கோர்க்கும் சிம்பு - கவுதம் மேனன்!

By: ram On: 13:26
  • Share The Gag


  •  tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

    சூர்யா கைவிட்ட நிலையில் கவுதம் மேனனுக்கு உதவ முன்வந்துள்ளார் சிம்பு.காக்க காக்க படம் மூலம் சூர்யாவை ஸ்டார் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியவர் கவுதம் மேனன். இதையடுத்து இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.

     கவுதம் கேட்டால் உடனே கால்ஷீட் கொடுக்கும் நிலையில் சூர்யா இருந்தார். அப்படித்தான் கவுதமின் சென்னையில் ஒரு மழைக்காலம் பட ஷூட்டிங்கில் திரைக்கதை கூட ரெடியாகாத நிலையில் சில நாட்கள் மட்டும் நடித்தார் சூர்யா. பிறகு அந்த படம் கைவிடப்பட்டது. வாரணம் ஆயிரம் படத்தில் மீண்டும் சூர்யாவை அழைத்தபோது உடனே சென்று நடித்து கொடுத்தார். சமீபத்தில் பைனான்ஸ் பிரச்னையில் கவுதம் சிக்கியபோதும் சூர்யா உதவ முன்வந்தார்.

    கவுதமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க ஓகே சொன்னார். ஆனால் இந்த முறை சூர்யா போட்ட கண்டிஷன், முழு ஸ்கிரிப்டும் அவருக்கு திருப்தி தர வேண்டும் என்பதுதான். அதுபோல் அமையவில்லை. இதனால் படத்திலிருந்து அவர் விலகினார். அதற்கு பிறகும் சூர்யா படம் இயக்குவதாக சொல்லி கவுதம் தீவிர முயற்சியில் இறங்கியதும் சூர்யா கடுப்பானார். கவுதமை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.

    இந்நிலையில் கவுதமுக்கு உதவ முன்வந்துள்ளார் சிம்பு. துருவ நட்சத்திரம் படத்தில் தான் நடிப்பதாக வலிய சென்று கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சிம்பு. இதையடுத்து சிம்புவின் இமேஜுக்கு ஏற்ப கதையை மாற்றி வருகிறார் கவுதம். சூர்யாவுக்கும் சிம்புவுக்குமான இடைவெளி இண்டஸ்ட்ரி அறிந்ததுதான். இந்நிலையில் சூர்யா கைவிட்ட படத்தை சிம்பு கையில் எடுத்திருப¢பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    0 comments:

    Post a Comment