Monday, 23 September 2013

Tagged Under:

இறைவனை வழிபட என்ன வழிகள்?

By: ram On: 20:06
  • Share The Gag


  • ஒருவனால் நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட முடியாது. பணிபுரியும் நேரத்திலும் பக்தி உணர்வுடன் செயல்பட்டால் மனம் தூய்மை பெறும். 


    உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது மகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள். குணத்தையோ, குற்றத்தையோ எங்கு விவாதித்தாலும் அங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதில் சிறிதளவாவது பங்கு வந்து சேர்ந்துவிடும். 


    எதையாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க, இறைவனை வேண்டுங்கள், அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். 


    இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இறைவனை மட்டும் நேசிப்பவன் புண்ணியவனாகிறான். உலகம் முழுவதும் பரந்து நிற்கும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள், அவன் தனது கருணையை உங்கள் மீது பொழிவான். 

    0 comments:

    Post a Comment