Tuesday, 20 August 2013

Tagged Under:

பயனுள்ள வீட்டு குறிப்புகள்

By: ram On: 20:27
  • Share The Gag


  • பயனுள்ள வீட்டு குறிப்புகள்:

    நமது அன்றாட வாழ்க்கையில் குறிப்புகள்:

    1. கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால், அதை ஒரு வெள்ளைத் துணியில் குப்புற வைத்து, அந்த வெள்ளைத் துணியை ஒரு இட்லிப் பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்களுக்கு ஆவியில் வைத்தால், தோட்டில் இறங்கியிருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கி விடும்.
     
    2. தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால் ஏதேனும் பற்பசையைத் தடவி ப்ரஷால் தேய்த்தால் அழுக்கெல்லாம் நீங்கி நகைகள் புதிதுபோல மின்னும்.

    3.. பல்லிகள் அதிகம் வராமல் தடுக்க; கடுக்காயைத் தூள் செய்து பொடித்த கற்பூரத்தை சம அளவில் கலக்கவும். இதில் ஒரு தேக்கரண்டிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் தேவையான அளவில் கலந்து, வீட்டைக் கழுவிய பிறகு ஆங்காங்கே ஜன்னல்கள், கதவுகள் ஓரமாகத் தெளித்தால் பல்லிகள் நடமாட்டம் வெகுவாகக் குறையும்.


    4. கண்ணாடி டம்ளர்கள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து எடுக்க வராவிட்டால், கீழ் டம்ளரை கொதிநீரில் வைத்து, மேலுள்ள டம்ளரில் மிகக்குளிர்ந்த நீர் ஊற்றி சிறிது நேரத்தில் மேல் டம்ளரை இழுத்தால் எளிதாக வந்துவிடும்.

    5. புத்தக பீரோவில் புகையிலைத் துண்டுகளைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

    6. தூபக்காலில் நெருப்புத் துண்டங்களைப் போட்டு அதன் மீது கிராம்புத்தூளைத் தூவவும். அந்த புகைக்கு ஈக்கள் ஓடிவிடும்.


    7. வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் அரை கப் வினீகரில் 2 ஸ்பூன் சமையல் சோடா கலந்து வாஷ் பேசினின் துவாரங்களில் ஊற்றவும்.
    அரை மணி நேரம் கழித்து கொதிக்கும் வென்னீர் 1 லிட்டர் அதில் ஊற்றவும். அடைப்பு நீங்கி விடும்.


    8. தேனீ அல்லது தேள் கடிக்கு: புகையிலையை ஒரு சிட்டிகை எடுத்து ஒரு சொட்டு நீரில் கலந்து கடிவாயில் வைத்து ஒரு பாண்ட் எய்டின் உதவியால் அழுத்தமாக ஒட்டவும். வலி உடனடியாக மறையும்.


    9. வீட்டில் பல்லிகள் வருகை அதிகமிருந்தால் ஆங்காங்கே மயிலிறைகை போட்டு வைப்பது அவற்றின் வருகையை நிறைய குறைத்து விடும். சுவற்றின்மீது கூட அலங்காரமாக ஒட்டி வைப்பது நல்ல பலனைத் தரும்.

    10. ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும். 

    11.  பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது; மங்காது. பட்டுச் சேலையும் பளிச்சிடும்.

    12.  வெள்ளிப்பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளையும் போட்டு வைக்க வேண்டும்.

    13. மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.

    14. மேஜை ட்ராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தட வினால் எப்போதும் சிரமமில்லாமல் திறந்து மூடலாம்.

    15. பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.

    16. தரையைத் துடைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு துடைக்க, ஈக்கள் பறந்தோடும். தொந்தரவில்லாமல் துடைக்கலாம். 

    17. காலிஃப்ளவரை சமைப்பதற்கு முன் வெண்ணீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் புழுக்கள் அழிவதுடன் காலிஃப்ளவரும் வெண்மையாக இருக்கும். 

    18. தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் கூட இருக்கும்.

    19. துவரம் பருப்பை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

    20. பட்டுப் புடவைகள் மடிக்கும் போது ஜரிகையை உள்புறம் வைத்து மடித்தால் ஜரிகை கறுத்துப் போகாமல் பாதுகாக்கலாம்.

    21. வெள்ளி நகைகள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு கற்பூரம் போட்டு வைத்தால் நகைகள் கறுக்காது.

    22. வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பூக்கள் தூசியாக இருந்தால், பூவையும், உப்பையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு குலுக்கினால் புதியது போல் ஆகிவிடும்.

    0 comments:

    Post a Comment