மிளகாய் நல்லதா? கெட்டதா? அதிக காரம் சாப்பிட்டால் அல்சர் வருமா? அதிக மிளகாய் சேர்த்த உணவு சூட்டை உண்டாக்குமா? இப்படி மிளகாயைப் பற்றிப் பரவலாக பலருக்கும் பல கேள்விகள் உள்ளன.
ஆனால், எந்த சமையலுக்கும் சுவைகூட்டும் முக்கியப் பொருளான மிளகாயில், நல்லதும் கெட்டதுமான அம்சங்கள் இணைந்தே இருக்கின்றன என்பதே உண்மை.
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், குடைமிளகாய் என மிளகாயில் பல வகைகள் உள்ளன. எல்லா மிளகாய்க்கும் குணங்கள் ஒன்றே. ஒரே ஒரு வித்தியாசம், காய்ந்த மிளகாயில் மட்டும் கலோரியும், வைட்டமின் ஏ சத்தும் மற்றதைவிட சற்று அதிகம்.
கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம். தவறில்லை.
எடைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு மற்றவர்களைப் போல எல்லா உணவுகளையும் சாப்பிட முடியாது. எந்த உணவையும் சுவைபட மாற்ற, அவர்கள் மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.
நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும்கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் “பீட்டா கரோட்டின்” என்கிற வைட்டமின் ஏ சத்தானது அதிகம்.
அதனால், விழித் திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது. வைட்டமின் சி சத்தும் அதிகம். அதனால் ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது.
மிளகாயில் “சிணீஜீணீ வீநீவீஸீ” என்கிற நிறமிதான் மிளகாயின் காரசார ருசிக்குக் காரணம். இந்த நிறமி அதிகமானால் மிளகாயில் காரம் அதிகரிக்கும். குறைந்தால் காரமும் குறையும்.
நரம்புப் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சொரியாசிஸ் என்கிற சரும நோய் உள்ளவர்களுக்கும் மிளகாய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.
ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
இரவில் காரசாரமான உணவு எடுத்துக் கொண்டால், காலையில் மிகவும் ஓய்வாக எழுந்ததாக உணர்வது இதனால்தான். தவிர மிளகாய் சேர்த்த உணவு, குடலை சுத்தப் படுத்தி, உடலை லேசாக்கி விடும்.
இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும், மிளகாயை அளவோடுதான் எடுக்க வேண்டும். சிலர் அதிக மசாலா, காரம் சேர்த்த உணவுகளை மட்டுமே எப்போதும் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டால் குடல் பிரச்சனை, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, மூலநோய் போன்றவை வரலாம்.
மிகவும் காரமான உணவு உண்ணும் போது, அந்தக் காரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த மிதமான உணவுகளையும் எடுக்க வேண்டும். அதனால்தான் தயிர்சாதம் – ஊறுகாய் போன்ற உணவுகளை நம் முன்னோர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்!
0 comments:
Post a Comment