Sunday, 7 September 2014

Tagged Under:

நல்லெண்ணெய் குளியல் அவசியமா?!

By: ram On: 18:00
  • Share The Gag
  • நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கேசம் பொலிவு பெறுவதுடன், உடல் உஷ்ணத்தைக் குறைப்பது, ஒளி, ஒலி, திறன் அதிகரிப்பது, சரும வியாதிகளில் இருந்து காப்பது, பித்தத்தைச் சமன்படுத்துவது என இதன் பலன்கள் பற்பல. எண்ணெய்க் குளியல் கூடாது என்று பல ஆண்டுகளாகவே மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    குறிப்பாக, குழந்தைகளுக்குக் கூடவே கூடாது என்கிறார்கள். இதற்குக் காரணம், முறையாக எண்ணெய்க் குளியல் எடுக்கத் தெரியாத, குழந்தைகளைக் குளிக்க வைக்கத் தெரியாத தலைமுறையாக நாம் இருப்பதுதான். குறிப்பாக, சீகைக்காய் துகள்கள் குழந்தையின் நாசிக்குச் சென்று, சுவாசப் பாதையில் அலர்ஜியை ஏற்படுத்த ஆரம்பித்தும் என்பதால்தான் எண்ணெய் குளியலே தேவையில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

     மற்றபடி, முன்கூட்டியே சீகைக்காயை சரியாக குழைத்துக்கொண்டு முறையாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை'' என்று வலியுறுத்துகிறார் சித்தமருத்துவர் .

    0 comments:

    Post a Comment