Sunday, 15 December 2013

Tagged Under: , ,

பா.ஜ.வில் சேர்ந்தால் அமைச்சர் பதவி: கங்குலிக்கு மோடி அழைப்பு!

By: ram On: 00:14
  • Share The Gag



  •  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை பா.ஜனதாவில் சேருமாறு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.


    அவ்வாறு கட்சியில் சேர்ந்தால் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதாகவும் அக்கட்சி, கங்குலியிடம் தெரிவித்துள்ளது.


    இதனிடையே மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி தருவதாக, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


    இந்நிலையில் கங்குலியிடம் இதுகுறித்து கேட்டபோது, தமக்கு பா.ஜ.வில் சேருமாறு அழைப்பு வந்துள்ளது உண்மைதான் என்றும், ஆனால் தாம் அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், விரைவில் இது குறித்த தனது முடிவை தாம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

      
    சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து அவரது ரசிகர்களை ஈர்க்க காங்கிரஸ் முயற்சித்தாக பா.ஜனதா குற்றம் சாட்டிய நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பதிலடியாக தங்கள் கட்சியில்  கங்குலியை சேர்க்க அக்கட்சி முயற்சிப்பதாக தெரிகிறது.

    0 comments:

    Post a Comment