Wednesday, 18 December 2013

Tagged Under: ,

சாகித்ய அகாடெமி விருது பெறுகிறார் தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்

By: ram On: 19:38
  • Share The Gag



  • 2013-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருது, தமிழில் கொற்கை நாவலை எழுதிய எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பெற்றிருக்கிறார்.


    எழுத்தாளர்களுக்கான உயரிய கவுரமாக கருதப்படும் சாகித்ய அகாடெமி விருது பெறுபவர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து 2011 டிசம்பர் வரை வெளியான புத்தகங்கள் இந்த ஆண்டு விருதுக்கான பரிந்துரைக்கு ஏற்கப்பட்டிருந்தன. இந்த முறை கவிஞர்களே அதிக விருதுகளைப் பெற்றுள்ளனர். பெங்காலி, உருது, சமஸ்கிருதம் உள்ளிட்ட 8 மொழி கவிஞர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.


    தமிழில் புதினத்திற்கான விருதை எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பெற்றிருக்கிறார். நெய்தல் நில மக்களின் வாழ்க்கையை ஒட்டி அவர் எழுதிய கொற்கை என்கிற நாவலுக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.


    2014 மார்ச் மாதம் 11ஆம் தேதி புது டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

    0 comments:

    Post a Comment