Wednesday, 11 December 2013

Tagged Under: , , , ,

செவ்வாயில் நன்னீர் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிந்த க்யூரியாசிட்டி!

By: ram On: 19:35
  • Share The Gag



  •  செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய அளவிலான நன்னீர் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை நாசா (NASA)-வின் க்யூரியாசிட்டி (CURIOSITY) உலவு வாகனம் கண்டறிந்துள்ளது.



    இந்த ஏரி சுமார் 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீர் நிறைந்ததாக இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. க்யூரியாசிட்டி (CURIOSITY) தரையிறங்கிய இடத்தில் உள்ள இந்த ஏரி சுமார் 150 கிலோ மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் சில ஆயிரம் ஆண்டுகளில் இந்த ஏரி வற்றிப் போயிருக்கக்கூடும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



    உயிர் வாழ்க்கைக்குத் தேவையான கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், கந்தகம் போன்ற பல தனிமங்கள் இந்த ஏரியில் இருந்ததாகக் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியில் உள்ள ஏரிகளைப் போன்றே இந்த ஏரியிலும் பல்வேறு அம்சங்கள் இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஏரியில் நுண்ணுயிர்கள் வாழ்ந்திருக்கும் சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    0 comments:

    Post a Comment