Friday, 1 November 2013

Tagged Under:

என் முன்னிலையில் பள்ளம் தோண்டுங்க::தங்கம் நிச்சயம் கிடைக்கும்”

By: ram On: 18:18
  • Share The Gag
  • “புதையல் இருப்பது உறுதி. ஆனால் புதையல் எடுப்பதற்காக தோண்டும் இடத்திற்கு என்னை அனுமதிக்காமல் அதனை கண்டு பிடிக்க முடியாது அதிலும் ராணுவத்தால் தோண்டும் பணி நடத்த வேண்டும். அத்துடன் மீடியாக்கள் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப் பட வேண்டும்.” சாமியார் சோபன் சர்க்கார் மறுபடியும் கூறியுள்ளார்.



    nov 1 - gold temple



    உ.பி. மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பழங்கால கோட்டையின் இடிபாடுகளுக்கு அடியில் 1,000 டன் தங்கம் புதைத்து வைத்திருப்பதாக, சோபன் சர்க்கார் என்ற பிரபல சாமியார் கனவு கண்டார். அவர் கொடுத்த தகவலை தொடர்ந்து, தங்கப்புதையலை எடுப்பதற்காக அந்த பகுதியில் தோண்டும் பணி, கடந்த 18-ந்தேதி தொடங்கியது. மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில் இந்த பணி நடைபெற்று வந்தது.


    மத்திய தொல் பொருள் ஆய்வு துறை சார்பில், கடந்த 12 நாட்களாக தொடர்ந்து தோண்டியும், புதையல் எதுவும் சிக்கவில்லை. பூமிக்கு அடியில் புதைந்திருந்த செங்கல் சுவரின் சிதைந்த பகுதிகள் மட்டுமே காணப்பட்டன. தங்கப்புதையல் வேட்டை தோல்வியில் முடிந்ததால், அந்த பகுதியில் தோண்டும் பணியை தொல் பொருள் ஆய்வுத்துறை திடீரென்று நிறுத்திவிட்டது. சாமியார் சோபன் சர்க்கார் கூறியபடி, புதையல் எதுவும் இல்லாததால், தோண்டும் பணி கைவிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.


    இந்நிலையில் கனவு கண்ட சாமியார் சோபன் சர்க்கார் பேசுகையில், புதையல் எடுப்பதற்காக தோண்டும் இடத்திற்கு என்னை அனுமதிக்காமல் அதனை கண்டு பிடிக்க முடியாது என்று கூறியுள்ளார். தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் புதையல் இருப்பது தெரியவந்த பின்னர் உண்மையை அறிவார்கள். புதையல் இருப்பது உறுதி. ராணுவத்தால் தோண்டும் பணி நடத்த வேண்டும். ஏன் மீடியாக்கள் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப்படவில்லை என்று சாக்கார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அங்கு ந

    0 comments:

    Post a Comment