Saturday, 9 November 2013

Tagged Under: , ,

எரிவாயு இணைப்பு கொடுக்கும்போது கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள் என்ன?

By: ram On: 12:44
  • Share The Gag
  • எந்த இடத்தில் எரிவாயு இணைப்பு கொடுக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. கீழ்க்கண்ட முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை சமையலறையில் பின்பற்றினாலே அது எரிவாயுவினால் ஏற்படும் விபத்துகளுக்கான காப்பீடு போலாகும்.


    •எரிவாயு சிலிண்டர் வைக்கும் அறை அல்லது சமையலறையில் நல்ல காற்றோட்டம் இருக்கவேண்டும். ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடியிருக்கும் அறையில் எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கக்கூடாது

    •எரிவாயு சிலிண்டர், அதன் அழுத்தத்தினை சரி செய்யும் நாப் அல்லது பட்டன், எரிவாயு செல்லும் இரப்பர் குழாய் போன்றவற்றை எளிதில் கையாளுமாறு எரிவாயு இணைப்பு அமைக்கப்பட வேண்டும்

    •தரைமட்டத்தில் எரிவாயு சிலிண்டர் இருக்குமாறு அமைக்கவேண்டும். ஆனால் தரைமட்டத்திற்கு கீழ் அதாவது தரைக்கு கீழ் இருக்கும் தளங்களில் எரிவாயு சிலிண்டர் இருக்குமாறு அமைக்கக்கூடாது.

    •சிலிண்டரை அலமாரியில் வைக்கும்போது அதன் தரைத்தளத்திலும் அதன் மேல்தளத்திலும் காற்றோட்டத்திற்கு துளைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    •சமைக்க உதவும் எரிவாயு அடுப்பை தரையில் வைக்கக்கூடாது. நின்று கொண்டு சமைப்பதற்கு ஏற்ற வகையில் போதுமான உயரத்தில் அடுப்பை வைக்கவேண்டும். மரப்பலகையினை அடுப்பு வைக்க உபயோகிக்கக்கூடாது. மரத்தினால் ஆன பலகையினை அதன் மீது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வைத்து அதன் மீது அடுப்பு வைக்கவேண்டும்.

    •ஜன்னலுக்கு நேராக எரிவாயு அடுப்பினை வைக்கக்கூடாது. ஏனெனில் காற்று வேகமாக வீசும் போது, அது தீயை அணைத்துவிடும். இவ்வாறு தீ அணைந்து விட்டால் எரிவாயு அந்த அறை முழுவதும் பரவி எளிதில் தீ பிடித்து விபத்து நேரிட ஏதுவாகும்

    •எரிவாயு அடுப்பினை பலகை அல்லது அலமாரியில் வைக்கும் போது அதன் ஒருபகுதி சுவரை ஒட்டி இருக்குமாறு வைக்கவேண்டும். அதாவது அடுப்பின் பின்பகுதி சுவரின் அருகில் இருக்குமாறு வைக்கவேண்டும். அடுப்பினை ஒட்டி காணப்படும் சுவரில், அலமாரி போன்றவை இருத்தல் கூடாது. அவ்வாரு இருந்தால், அதிலிருக்கும் பொருட்களை அடுப்பு எரியும் போது நீங்கள் முயற்சிக்கும் போது, உங்கள் ஆடை தீ பற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது

    •ஒரு அறையில் 2 எரிவாயு சிலிண்டர்களுக்கு மேல் வைக்கக்கூடாது. இரண்டு சிலிண்டர்களை வைக்கும்போது சமையலறையின் குறைந்தபட்ச பரப்பளவு 10மீ2 ஆக இருக்கவேண்டும்

    •எப்பொழுதும் எரிவாயு சிலிண்டர்களை செங்குத்தாக அதன் வால்வு மேல் பகுதியில் இருக்குமாறு வைக்கவேண்டும. செங்குத்தாக வைக்காமல் படுக்கைவாட்டிலோ அல்லது வேறு மாதிரியாகவோ வைத்தால் எரிவாயு சிலிண்டரிலுள்ள எரிவாயு திறந்த வால்விலிருந்து வெளியேறி அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது

    •மின்சார ஓவன், மண்ணென்ணெய் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எரிவாயு அடுப்பிலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருக்குமாறு வைக்கவேண்டும்.

    •எரிவாயு சிலிண்டரை வெயில், மழை, வெப்பம், தூசி படியும் இடங்களில் வைக்கக்கூடாது

    •சிலிண்டர் மேல் பாத்திரங்களையோ, துணியையோ வைக்கக்கூடாது

    •சிலிண்டரின் பாதுகாப்பு மூடியினை சிலிண்டரின் மேல்வளையத்துடன் இணைத்து வைக்கவேண்டும். ஏனெனில் எரிவாயு, வால்வின் வழியாக சிலிண்டரிலிருந்து கசியும்போது இந்த பாதுகாப்பு மூடியினை வால்வின் மேல் வைத்து எரிவாயு கசிவை தடுக்கமுடியும்

    •வால்வின் மீது பாதுகாப்பு மூடி போடாமல் காலி அல்லது எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டரை வைக்காதீர்கள்

    •அழுத்த ரெகுலேட்டரை உபயோகிக்கும் போது, அதன் மேல் பாகத்தில் கூறிய அறிவுரைகளை பின்பற்ற தயங்காதீர்கள்.

    0 comments:

    Post a Comment