Monday, 25 November 2013

Tagged Under: ,

ஸ்போர்ட்ஸை பார்த்தாலே போதும்-’பிட்னஸ்’ ஆகி விடலாம்! – ஆய்வு முடிவு!

By: ram On: 17:17
  • Share The Gag
  • பொதுவாக ‘பிட்னஸ்’ என்பதை முழு நலம் என்று பொருள் கொள்ளலாம். இத்தகைய முழு நலம் உடல் உறுதியினால் மட்டும் வருவதல்ல. வேலை செய்யும் திறமை, தசைகளின் வலிமை, தசைகளின் திறன், மூட்டுக்களின் இயக்கம், மன அமைதி இவை அனைத்தும் சேர்ந்ததுதான் முழுநலம் எனப் படுகிறது.இது போன்ற ‘பிட்னஸ்’ஆக வேண்டுமெனில் ஓட்டப்பந்தயம், நீசசல் போட்டி அல்லது பழுதூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டுமென்ற சூழ்நிலை இருந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை பார்க்கும்போதே பார்ப்பவரின் இதயத்துடிப்பு விகிதம், சுவாசம், ரத்த ஓட்டம் மற்றும் வெளியேறும் வியர்வையின் அளவு உள்ளிட்டவைகள் அதிகரித்து அவர்களை ‘பிட்’ஆக்குகிறது என்று ஒரு ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது.

    nov 25 - health sports

    அண்மையில் இன்டர்நேஷனல் ஜர்னல் பிரான்டியர்ஸ் இன் அட்டானமிக் நியூரோசயின்சில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு தொடர்பான தகவல் அறிக்கையில்,”கடின உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை, ஒருவர் பார்க்கும்போது, அவரது தசை நரம்பின் இயங்கு நடவடிக்கை அதிகமாவதை முதலில் உறுதி செய்யப்பட்டது. நம் உடலில் அரிதாக ஏற்படும் உடலளவில் மற்றும் மன ரீதியான அளவில் ஏற்படும் மாறுபாட்டை கண்டறிவதற்கான சிறந்த கருவியாக தசை நரம்பின் இந்த அதீத செயல்பாடு காணப்பட்டது.

    இதற்கிடையில் கடினமான உடற்பயிற்சிகள் செய்யும் போது ஏற்படும் இதயத்துடிப்பு அதிகரிப்பு, வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரித்தல், ரத்த குழாய்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டம் அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்கள், இந்த தசை நரம்புகளின் அதீத இயங்குதிறனால் ஏற்படுவது அனைவரும் அறிந்ததே.

    இதையொட்டி நடந்த ஆய்விற்கு 9 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் உடலின் வெளிநரம்புகளில் கூரிய ஊசிகள் செலுத்தப்பட்டு, ரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மின்னணு மாற்றங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டது.

    முதலில், அவர்கள் சாதாரணமாக இருக்கும் நிலையில் மின்னணு மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் 22 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ அவர்கள் முன் ஒளிபரப்பப்பட்டது. பின் அவர்களது ரத்த குழாய்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மின்னணு மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் பதிவான மின்னணு மாற்றங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் ஏற்படும் மின்னணு மாற்றங்களை ஒத்த அளவில் இருந்தது கண்டறியப்பட்டது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    0 comments:

    Post a Comment