Saturday, 23 November 2013

Tagged Under: , , ,

கர்ப்பிணிகளின் சோர்வை போக்கும் உணவுகள்!

By: ram On: 20:51
  • Share The Gag
  •  

    கருவுற்றிருக்கும் காலத்தில், ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் தாயின் உணவைப் பொறுத்தே குழந்தையின் ஆரோக்கியம் உள்ளது. இந்த ஒன்பது மாத காலமும் ஒரு தாய் தன் குழந்தையை கருவில் சுமப்பது என்பது எளிதான காரியம் அல்ல.

    ஒவ்வொரு பெண்ணும் தான் கருவுற்றிக்கும் காலத்தை பெரிதும் விரும்புவார்கள். குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளும், தாய்க்கு மிகுந்த இன்பத்தை அளிக்கும். ஆனால் கர்ப்ப காலத்தில் அதிக சோர்வு இருக்கும். அதிலும் முதல் மூன்று மாத காலத்தில் சோர்வு என்பது மிகவும் இயல்பான ஒன்றாகும்.

    சிலர் கருவுற்றிக்கும் காலம் முழுவதுமே சோர்வாக உணர்வார்கள். எனினும் சிலர் அந்த சோர்வு நாளடைவில் குறைவதை உணர்வார்கள். நிறைய பெண்கள் கருவுற்றிக்கும் காலத்தின் தொடக்கத்திலேயே, அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் முன்பே, சோர்வுடன் இருப்பதை உணர்வார்கள்.

    இத்தகைய சோர்வை சமாளிக்க கர்ப்பிணிகள் ஒருசில உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.

    • குடைமிளகாய் உடலில் உள்ள இரும்புச்சத்தை செயல்படுத்த உதவுவதுடன் மட்டுமல்லாது, இயற்கையான வலிமையூட்டியாக செயல்பட்டு வரும். மேலும் உடல் சூட்டையும், ஆக்சிஜன் உட்கொள்வதை அதிகரிக்கவும் உதவும். அதிலும் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய வைட்டமின் சி சத்தானது, குடைமிளகாயில் 300% நிறைந்துள்ளது.

    • ப்ளூபெர்ரி பார்க்க சிறிதாக இருந்தாலும், அவை நமது ஊக்கத்தின் அளவுகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இயற்கையான சர்க்கரை அதிகம் நிறைந்துள்ளது. சில வகை பழங்களைப் போல, இது உடலில் உள்ள சர்க்கரை அளவுகளை அதிகரிப்பது இல்லை. அதனால் நம்மை இது அதிக நேரம் சக்தியுடன் இருக்கச் செய்யும்.

    • வெண்ணெய் பழங்கள் வலிமையை மெதுவாக வெளிக்கொண்டு வருவதற்கு மூலதனமாக இருக்கும். அதில் மற்ற பழங்களை விட ஊட்டச்சத்து நிறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. ஒரு முழு வெண்ணெய் பழத்தில் உள்ள 14 கிராம் நார்ச்சத்து, நாம் சாப்பிடும் பிரட் மற்றும் தவிடு உணவு தானியங்களுக்கு போட்டியாக இருந்து, நமது ஜீரணசக்திக்கு உதவும்.

    • வாழைப்பழங்களில் உள்ள தனித்தன்மையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மதியம் ஏற்படும் சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலுக்கு சக்தி அளிக்க உதவும். பொட்டாசியத்தை மூலதனமாக கொண்டுள்ள இவை தளர்ச்சி, தசைப்பிடிப்பு மற்றும் நீர் நீக்குதல் போன்றவற்றை எதிர்த்து செயல்படும்.

    • வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை பழம் கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஆகவே சோர்வைப் போக்க எளிதான வழி சுடுநீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ எலுமிச்சையை பிழிந்து குடிப்பதாகும். இதனால் அது நீர் சேர்தல் மற்றும் ஆக்ஸிஜனேட் செய்து, உடலை புத்துணர்ச்சியுடனும் வலிமையுடனும் இருக்கச் செய்யும்.

    0 comments:

    Post a Comment