Thursday, 28 November 2013

Tagged Under: , , , ,

நிம்மதி...!

By: ram On: 23:54
  • Share The Gag
  • நிறைவு,நிம்மதி இவையிரண்டையும் தேடியே எல்லோர் வாழ்க்கையும் இயங்குகிறது. சிலருக்கு அனைத்தும் இருந்தும் நிம்மதியும் மன நிறைவும் இருக்காது. ஏன்? நாம் எடுக்கும் எல்லா முடுவுகளுமே சரியானதாக அமைவதில்லை. அதேபோல் நம் வாழ்க்கை குறித்தும்,லட்சியம் குறித்தும் எடுக்கும் முடுவுகளும் சரியானதாக தான் இருக்கவேண்டும் என்பதல்ல. சில நேரங்களில் நாம் விரும்புபவை,நேசிப்பவை கூட நமக்குத் தடையாக இருக்கலாம்.

    வாழ்க்கைப் பாதை என்றும் பூந்த்தோட்டமாக தான் இருக்க வேண்டும் என்பதல்ல. முட்களும் குழிகளும் நிரம்பியதாகவும் இருக்கலாம். வாழ்வில் எப்போதும் கவனம் தேவை. அந்த கவனம்,நிதானம் மட்டுமே உன் வாழ்க்கை மலர் போல பூக்க உதவும். நாம் என்ன வேண்டுமானாலும் நம் வாழ்வு குறித்து திர்மானிக்கலாம். ஆனால்,அந்த முடிவே தவறாகக் கூடாது. முடிவெடுத்த வாழ்க்கை முழுமையை வருவது நம் கையில் தான் உள்ளது. பல நேரங்களில் நம்மை பற்றி,நம் தோல்வியை பற்றி,நம் குறை பற்றி,நம் இயலாமை பற்றியே மனம் சிந்திக்கிறது.

    வாழ்வில் தொடர்ந்து முன்னேற,நிறைவுகளையும் அடிக்கடி நினைவுக் கூற வேண்டும். இது வரை நடந்தவையே இன்று நடப்பதற்கு பாடம். ஆனால்,எல்லா விசயங்களும் ஒரே தடவையில் மனதில் பதிந்து விடுவதில்லை. கற்றுக்கொள்ளும் ஆர்வம்,நம்முள் நம்மை பரிசிலிக்கும் போதுள்ள இவையே எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள தோன்றும். அதுவே நாளைய விளைவு.

    ஒருவர் மன நிம்மதியை அடைய சில வழிகள்:

    - தன் உணர்ச்சிகளை புரிந்துக் கொள்வது.

    - தன் சூழலை முழுமையை பார்ப்பது.

    - மாற்று வழிகள் வாழ்வில் உண்டா என்று தேடுவது.

    - வாழ்வின் பாதையை முடிவெடுப்பது.

    - திறமைகளை வளர்ப்பது.

    - ஒவ்வொரு கால கட்டத்திலும் விளைவுகளை பார்ப்பது.

    "கனவு மெய்ப்படவேண்டும்,காரியமாவது விரைவில் வேண்டும்,தரணியிலே பெருமை வேண்டும்"என்று பாரதி கூறியது போல,நம்மை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். இதை எல்லாம் செய்தாலே நிம்மதி வரும்.

    0 comments:

    Post a Comment