Tuesday, 15 October 2013

Tagged Under:

" ஆண்டவன் யார்.." (நீதிக்கதை)!

By: ram On: 21:56
  • Share The Gag
  • ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்.அவனுக்கு ஒரு நாள் கடவுள் என்பது யார்? அவரது ஆற்றல் எஎன்ன? என்ற சந்தேகம் எழுந்தது
    அந்த சந்தேகத்தை தீர்க்க அவனது அமைச்சர்கள் யாராலும் முடியவில்லை.

    அதனால் கோபம் அடைந்த அரசன்,தன் தலைமை அமைச்சரிடம் " என் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு... நாளை வரை அவகாசம் தருகிறேன்' என்றான்.

    தலைமை அமைச்சரும் வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தார்.அவர் வருத்தத்தை அறிந்த அவரது பத்து வயது மகள் 'நான் நாளை வந்து அரசரின் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் ' என்றாள்.

    அடுத்த நாள் அரச சபையில் அரசனிடம் அவள் ' அரசே ஒரு குடுவையில் பால் வேண்டும்' என்றாள்.

    பால் கொண்டு வந்து தரப்பட்டது.

    பால் கொண்டு வந்தவனைப் பார்த்து அவள்...'இந்தப் பாலின் நிறம் என்ன ' என்றாள்.

    'வெள்ளை நிறம்'  என்றான் அவன்.

    'இப்பாலைக் கறந்த மாடு என்ன நிறம்' என்றாள்.

    'கருப்பு நிறம்'

    'அந்த கருப்பு நிற மாடு எதைத் தின்று இந்த பாலைத் தந்தது'

    'பசும் புல்லை'

    இப்போது அவள் அரசரைப் பார்த்து ...'யார் பச்சைப் புல்லை கருப்பு மாட்டிற்குத் தந்து வெள்ளைப் பாலை உருவாக்குகிறாரோ அவர் தான் கடவுள்....

    ஆண்டவன் விந்தையன செயல்கள் அனைத்தும் செய்யும் ஆற்றல் பெற்றவர்' என்றாள்..

    அரசனும் மனம் மகிழ்ந்தான்.

    0 comments:

    Post a Comment