Thursday, 10 October 2013

Tagged Under:

சஸ்பென்ட் செய்த கல்லூரி முதல்வரை வெட்டிக் கொன்ற மாணவர்கள் – தூத்துக்குடி பயங்கரம்!

By: ram On: 22:01
  • Share The Gag

  • தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டிலுள்ள இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் அக்கல்லூரி மாணவர்களால் படுகொலை செய்யப்பட்டார். கல்லூரியிலிருந்து சஸ்பென்ட் செய்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் முதல்வர் சுரேஷை படுகொலை செய்துள்ளனர்.


    10 - tutugudi college

     



    திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 16 கி.மீட்டர் தொலைவில் வல்லநாடு கிராமம் உள்ளது. இங்கு இன்ப்ன்ட் ஜீசஸ் என்ற பொறியியல் கல்லூரி உள்ளது.. இங்கு சுமார் 2 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். 


    இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு 9 மணியளவில் முதல்வர் சுரேஷ் காரில் வந்து இறங்கினார். இந்நேரத்தில் தயாராக இருந்த 3 பேர் கொண்ட மாணவ கும்பல் கையில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால் கல்லூரியில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து ஓடினர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முதல்வர் சுரேஷ் உயிருக்கு போராடியி நிலையில் பாளை., ஐகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். செல்லும் வழியில் இவரது உயிர் பிரிந்தது. 


    இந்த கொலையில் இங்கு படிக்கும் 3 மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாக முதல்கட்ட தவகல் தெரிவிக்கிறது. இந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு முதல்வரே காரணம் என்று இவர் மீது மாணவர்கள் ஆத்திரமுற்றனர். இதனையடுத்து இவரை கொலை செய்ய மாணவர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது. 3 பேரும் முறப்பநாடு போலீசில் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் இதனை உறுதி செய்யவில்லை.


    0 comments:

    Post a Comment