Saturday, 12 October 2013

Tagged Under: , ,

இந்திய இளைஞருக்கு ஐ. நா. விருது - இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதற்கு!!

By: ram On: 13:56
  • Share The Gag

  • பள்ளிக்கல்வி திட்டம் உருவாக்கியதற்காக ஐ.நா.வின் சிறப்பு விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.

    12 - varon arora u n award winner

     


    உலக அளவில் தொழில் நுட்ப துறைகளில் சிறந்த திட்டங்களை உருவாக்கும் இளைஞர்கள் 10 பேரை, சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன்(ஐ.டி.யூ.) தேர்வு செய்து ஐ.நா. சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கிறது. இதற்கான போட்டியில் 88 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


    18 வயது முதல் 26 வயதிற்குட்பட்டவர்களே பங்கேற்க முடியும். இந்த விருதுக்கு தேர்வு பெற்ற 10 பேரின் பெயர் விவரத்தை ஐ.டி.யூ. அமைப்பின் பொதுச்செயலாளர் ஹாமாடோவின் தோரே நேற்று அறிவித்தார்.
    இந்த விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்வு பெற்றார். தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.


    மேலும் வியட்னாம், டிரினிடாட் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் தேர்வாகி இருக்கிறார்கள். வெற்றி பெற்ற 10 பேரும் நவம்பர் மாதம் பாங்காக்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    Indian youth wins UN award

    *********************************************
     


    A young man from India is among 10 people from around the world selected for a prestigious United Nations award in recognition of their work as entrepreneurs and use of technology to change the world. 

    0 comments:

    Post a Comment