Monday, 21 October 2013

Tagged Under: ,

பீதியை கிளப்புது உணவு பாதுகாப்பு துறை நீங்க வாங்கும் ஸ்வீட் தரமானதா!

By: ram On: 17:06
  • Share The Gag
  • தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு வரிசையில் ஸ்வீட்டும் தவிர்க்க முடியாத அயிட்டம். தீபாவளிக்காக சென்னையில் உள்ள எல்லா ஸ்வீட் ஸ்டால்களிலும் பலதரப்பட்ட புதுவகையான ஸ்வீட்கள் தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு துறை அதிரடி ரெய்டு நடத்தியது. சென்னையில் உள்ள அனைத்து ஸ்வீட் ஸ்டால்களிலும் ஆய்வு நடத்தியதில், பெரும்பாலான கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் தரமற்றவையாக இருப்பதாக பீதி கிளம்பியுள்ளது. ஸ்வீட் தயாரிக்கப்படும் இடம், அவற்றில் கலக்கப்படும் பொருட்கள் ஆகியவை தரமில்லாதவை என கூறப்படுகிறது.




    மேலும், எப்போது ஸ்வீட் தயாரித்தார்கள், அவை எத்தனை நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்கிற தகவலையும் தயாரிப்பவர்கள் குறிப்பிடுவதில்லை.



     இதனால், சுகாதாரமான வகையில் தரமான ஸ்வீட்களை தயாரித்து விற்குமாறு சம்மந்தப்பட்ட கடை நிர்வாகத்தினருக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘எல்லா ஸ்வீட் பாக்சிலும் காலாவதி தேதி யை குறிப்பிட வேண்டும்.


    ஸ்வீட் எப்போது தயாரித்தார்கள், எத்தனை கிலோ என்ற தகவலையும் குறிப்பிட வேண்டுமென அறிவுருத்தியுள்ளோம். இத்தகைய குறிப்புகளுடன் கூடிய ஸ்வீட் பாக்ஸ்கள் மட்டுமே விற்க வேண்டும். தரமில்லாத ஸ்வீட்களையோ, காலாவதி தேதியில்லாத ஸ்வீட்களையோ விற்பனை செய்தால் எங்களுக்கு புகார் தரலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என கூறியுள்ளனர்.


    தரமில்லாத ஸ்வீட்களை சாப்பிடுவதால், வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், புட் பாய்சன் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே, நீங்கள் ஸ்வீட் வாங்கும் போது கவனமா பார்த்து வாங்குங்க. தரமில்லாத ஸ்வீட் விற்கப்பட்டால் 044-24351051 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தரலாம்.

    0 comments:

    Post a Comment