Wednesday, 4 September 2013

Tagged Under:

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள்: நாசா கண்டுபிடிப்பு!

By: ram On: 17:26
  • Share The Gag
  • அமெரிக்க நாசா நிறுவனம் மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி செவ்வாய் கிரகத்தை தற்பொழுது ஆராய்ந்து வருகின்றது.

    இந்த விண்கலமானது, முன்னர் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமான பெர்குளோரேட்ஸ் என்ற உப்பு படிமங்களை கண்டுபிடித்துள்ளது.

    இந்த உப்பு கலந்த பாறைத் துகள்களை சூடுபடுத்தும்பொழுதும் இதிலிருந்து குளோரினேட்டட் ஹைட்ரோ கார்பன்கள் வெளியேறியது.
    அப்பொழுது கூடவே அதிக அளவிலான ஆக்சிஜனும் வெளியேறுவதை விஞ்ஞானிகள் பார்த்துள்ளனர்.

    இந்த பெர்குளோரேட் உப்புகள் மூலம் செவ்வாய் கிரகத்தில் முன்னர் உயிரினங்களின் புழக்கங்கள் இருந்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

    mars_earth 



    0 comments:

    Post a Comment