Sunday, 22 September 2013

Tagged Under: , ,

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைனில் வசதி!

By: ram On: 11:09
  • Share The Gag


  • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது. இப்படி ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்கெனவே உள்ளது. அனால் சொந்தமாக இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் மையங்கள் மூலம் இனி பலன் கிடைக்கும். வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைன் வசதியை பெற வெப்சைட் முகவரி: www.elections.tn.gov.in


    sep 22 - election comision
     



    இது தொடர்பாக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் “இந்தியாவில் முதல் முறையாக கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்யும் வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 994 இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களோடு தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் மட்டும் 86 மையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த மையங்கள் செயல்பட துவங்கும். தங்களது வீட்டில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் இந்த மையங்களுக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 



    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அரசு அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்கு வந்து சோதனை செய்து 40 நாளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடை யாள அட்டை வழங்குவார்கள். கம்ப்யூட்டர் மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்கும் விண்ணப்பத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைக்க ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். வாக்காளர் பெயர் பட்டியலை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்க ரூ.3 மட்டுமே பணம் வசூலிக்கப்படும். வாக்காளர்கள் பெயரை சேர்ப்பது குறித்து விண்ணப்பம் கொடுத்தவர்கள், அதுகுறித்த சந்தேகங்களை 1950 என்ற எண்ணில் தொலைபேசி எண்ணில் பேசி தெரிந்து கொள்ளலாம். 



    மேலும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் வரும் 1ம் தேதி முதல் நடைபெறும். இங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை பொதுமக்கள் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். ஏற்காடு எப்போது?: ‘ஏற்காடு தொகுதி எம்எல்ஏ பெருமாள் மரணம் அடைந்ததையொட்டி, ஜனவரி 16ம் தேதிக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம்தான் தேர்தல் தேதி முடிவு செய்து அறிவிக்க வேண்டும்’ என்றார்.

    0 comments:

    Post a Comment