Thursday, 12 September 2013

Tagged Under:

ஆல் இன் ஆல் அழகு ராஜா – கொஞ்சம் முன்னோட்டம்!

By: ram On: 17:39
  • Share The Gag


  • ஒரு கல் ஒரு கண்ணாடி.சிவா மனசுல சக்தி, பாஸ்என்கிற பாஸ்கரன் ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கி வரும் படம் ஆல் இன் ஆல் அழகு ராஜா.இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். 


    கார்த்தி-காஜல் ஜோடி சேரும் இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு இருவரும் நான் மகான் அல்ல படத்தில் ஜோடி சேர்ந்திருந்தனர். தமன் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படம் காமெடி கலந்த ஃபேமிலி சென்டிமென்ட்டாக உருவாகி வருகிறது.மேலும் படத்தில் கார்த்திக்கு அப்பாவாக பிரபு நடிக்கிறார். 


    கதையில் பிரபுவுக்கு ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இருக்கிறதாம். இதில் இளவயது பிரபுவாக கார்த்தி நடித்திருக்கிறார். வழக்கமாக ஃப்ளாஷ்பேக் காட்சியில் சம்பந்தப்பட்ட நடிகர் தான் நடிப்பார். ஆனால் ஒரு புதுமைக்காக ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சியில் பிரபுவுக்கு பதிலாக கார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார்கள்.முதலில் இளவயது பிரபுவாக அவரையே நடிக்க வைக்க முடிவு செய்து பின்பு ஒரு மாறுதலாக இருக்கட்டும் என்று கார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார்களாம்.


    0 comments:

    Post a Comment