Tuesday, 10 September 2013

Tagged Under: ,

இந்திய அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரின் வெளிநாடு சிகிச்சை செலவை இனி அரசே ஏற்கும்!

By: ram On: 17:01
  • Share The Gag

  • இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, வெளிநாடுகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான செலவை, இனி அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.இந்த ஆட்சிப் பணி அதிகாரிகள் இது போன்று வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சைப் பெற்றால், அதற்கான செலவுத் தொகையை திரும்பப் பெறும் வசதி, இது வரை கிடையாது என்பது நினைவு கூறத்தக்கது..


    sep 10 - hospital cartoon

     


    இந்தியாவில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள், அவர்கள் பணியாற்றும் மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திலேயோ அல்லது வெளிநாடுகளுக்கு சென்றோ, அவசர மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால், அதற்கான செலவுத் தொகையை திரும்பப் பெறும் வகையில், புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.


    ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ, அபாயகரமான இதய அறுவை சிகிச்சை, எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நரம்பியல் தொடர்பான பிரச்னைகளுக்கு, வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெறலாம். இதற்கு, அதற்கென நியமிக்கப்பட்ட கமிட்டி பரிந்துரை செய்யும். 

    வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெறுபவருக்கு, விமானத்தில் சென்று வருவதற்கான டிக்கெட் கட்டணத்தையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

    அந்தந்த அதிகாரிகளுக்கான மருத்துவச் செலவுத் தொகையாக, எந்த அளவுக்கு திரும்பப் பெறலாம் என்பதை வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்யும்.


    Govt to bear babus’ medical treatment expenses abroad

    **************************************************


     The government has eased norms and allowed bureaucrats and their dependent family members to get medical treatment abroad at state cost.A member of All India Services– Indian Administrative Service (IAS), Indian Police Service (IPS) and Indian Forest Service (IFoS)–can also be airlifted outside the state in cases of a medical emergency, the new rules by Ministry of Personnel said.

    0 comments:

    Post a Comment