Sunday, 18 August 2013

Tagged Under:

பொறியியல் பட்டதாரிகளுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பணி வாய்ப்பு!

By: ram On: 19:58
  • Share The Gag


  • மத்திய அரசுக்கு சொந்தமான கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


    பணி: Project Officer (Mechanical -12, Electrical – 06, Electronics-02, Civil-02 )

    கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். அத்துடன் கப்பல் கட்டும் தளம், மரைன் இன்ஜினியரிங் பயிற்சி நிலையம், கனரக பொறியியல் தொழிற்சாலையில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

     பணி காலம்: 2 வருடம். ஒப்பந்த அடிப்படையிலானது.


     உதவித்தொகை: பயிற்சியின்போது முதலாம் ஆண்டு மாதம் ரூ.22,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ. 22,500 வீதம் வழங்கப்படும். பணியின் நேரத்தை விட கூடடுதலாக வேலை செய்தால் மாதம் ரூ.3,000 வரை OT சம்பளம் வழங்கப்படும்.

    வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசு விதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

    தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    நேர்முகத்தேர்வு மையம்: கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறும்.

    விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்


    மேலும் முழுமையான தகவல்களை அறிய www.cochinshipyard.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2013 ஆன்லைன் படிவ நகல் மற்றும் சான்றிதழ் நகல்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 27.08.2013

    0 comments:

    Post a Comment