Friday, 31 May 2013

Tagged Under: ,

எழில்மிகு ஏற்காடு!

By: ram On: 06:53
  • Share The Gag








  • சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைப் பகுதியில் ஏற்காடு, அமைந்துள்ளது.
    இயற்கையின் அழகை கண்டு ரசிக்க ஏற்ற இடம் ஏற்காடு. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவிலும் கடல் மட்டத்திலிருந்து 1623 மீட்டர் உயரத்திலும் அதாவது 5326 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. 
     
     
            சேலத்திலிருந்து ஏற்காடு செல்வதற்கு மலைப் பாதையின் வழியே 20 கொண்டை ஊசிவளைவுகளைக் கடந்து செல்லவேண்டும்......அப்படி பயணிக்கும் போது ..நம் முகத்தை தொட்டுச் செல்லும் சில்லென்ற மேகங்கள்,அந்த மேகங்களை தாலாட்டும் வானுயர்ந்த மரங்கள், வழியெங்கும்  கொண்டை ஊசி வளைவுகள், இதயம் வருடும் மென்மையான இனியக் காற்று..இவை நம்மை சொர்க்க பூமிக்கு அழைத்துச் செல்லும்...ஏற்காடு எனும் அதிசய பூமியில் கால் பதித்ததும் பரந்து விரிந்த ஏரி, பசுமை போர்த்திய ரோஜாத்தோட்டம், பக்கவாட்டில் அருவிகள்  என நம் மனதிற்குள் உற்சாகம் வந்து நம்மை பரவசப்படுத்தும்...இயற்கையின் அதிசயமாக விளங்கும் ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என  அழைக்கப்படுகிறது..அதற்கேற்ப நம் மனதையும்  பர்சையும் ஆரோக்கியமாக வைக்கிறது ஏற்காடு.
     
     

         கி.பி.1820 முதல் 1829ம் ஆண்டு வரை சேலத்தில் கலெக்டராக இருந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த டேவிட் காக்பர்ன் என்பவர் ஏற்காட்டின் தந்தை எனப்படுகிறார்.ஏற்காடு மலைத்தொடர் முதன் முதலாக...கண்டறியப்படுவதற்கு....முன்னாள் இருளடைந்த காடுகளாக இருந்ததாகவும்.  இவரது காலத்தில் தான் சேர்வராயன் மலைப்பகுதியில் காபி, பேரிக்காய் மற்றும் ஆப்பிள் பயிரிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
    சேர்வராயன் மலையில் காபி பயிரிடப்பட்டப் பின்பே..நீலகிரியிலும்,கொடைகானலிலும் மற்றும் பிற மாவட்டங்களுக்கும் காபி பயிரிடுவது விரிவடைந்தது என்கிறார்கள். 
    இதனிடையில் 1836ம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த பிஷர் என்பவர் சேலம் ஜமீன்தாரின் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விலைக்கு வாங்கினார்.
    அவரைத் தொடர்ந்து சேர்வராயன் மலைப்பகுதியில் உள்ள தோட்டங்கள் உள்ளடக்கிய நிலங்களை பெரிய பணக்கார முதலாளிகள் வாங்க முன்வந்தனர்.
    அதன்பின்னரே ஏற்காடு மலைப் பகுதி விரிவடைந்து வளர்ந்ததாக அரசு சுற்றுலா தகவலில் சொல்லப்படுகிறது. 
     
     

     
    இன்று 30 டிகிரி செல்சியசுக்கு மேலும், 13 டிகிரி செல்சியசுக்குக் கீழும் வெப்பநிலை செல்லாத அருமையான சீதோஷ்ண நிலையுள்ள ஏற்காட்டில் எப்போதுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது. ஊட்டி,கொடைக்கானல் போன்று இங்கு சீசன் என்று எதுவுமில்லை. எப்போதுமே இங்கு சீசன் தான்.
     
     
     
    இயற்கையின் எழிலோடு ரம்மியமான சூழ்நிலையில் அமைந்திருக்கும் ஏற்காட்டில் நாம் பார்த்து மகிழ, சிறந்த இடங்கள் எராளமான இடங்கள் உள்ளன
    அவ்வற்றில் அண்ணா பூங்கா, படகு இல்லம், ரோஜா தோட்டம், மான் பூங்கா, கிளியூர் பால்ஸ், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சில்ரன்ஸ் சீட்..போன்றவை நம்மை ஆச்சர்யமூட்டும் அற்புத இடங்களாகும்.
     
     
     
    ஏற்காடு  ஏரி
     
    ற்காட்டில் அமைந்துள்ள ஏரியும், அதில் படகுச் சவாரியும், ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் விஷயங்களாகும்.
    ஏரியைச் சுற்றி அழகான தோட்டமும், ஓங்கி வளர்ந்த மரங்களும் சொர்க்க பூமியில் நாம் இருப்பதைப் போன்ற உணர்வை தருவதால்
    எப்போதும் இங்கே கூட்டம் நிரம்பி வழியும்..இந்த ஏரிக்கு அருகே அண்ணா பூங்கா என்ற அழகான பூங்கா அமைந்துள்ளது. அது இந்த எரிக்கு மேலும் அழகைக் கூட்டுகிறது.இந்த ஏரியில் நாமே படகு சவாரி செய்து மகிழலாம். ஏரி முழுவதும் படகுப் பயணம் செய்ய தனியாக வாடகை செலுத்த வேண்டும்.
     
     

    லேடீஸ் சீட்
     
    ற்காட்டில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.
    சேலம் மாநகரின் ஒட்டுமொத்த அழகையும் ஒரே இடத்தில் இருந்து ரசிக்க
    இந்த இடத்தை விட்டால் வேறு எங்கும் வாய்ப்பு கிடைக்காது.
    இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் மலையில் இருந்து சேலம் மாநகரைப் பார்த்தால் ஒளி வெள்ளத்தில் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே சேலம் மிதப்பது போல் தோன்றும். ஏற்காடு செல்பவர்கள் லேடீஸ் சீட் என்ற இப்பகுதியை பார்க்கத் தவறினால், ஏற்காடு சென்று வந்ததே வீணாகி விடும் அந்த அளவுக்கு மிகவும் பிரம்மிக்கத் தக்க இடமாக இருக்கிறது  லேடீஸ் சீட்.
     
     

    பகோடா பாயிண்ட்
     
    துவும் ஒர் அற்புத உணர்வை தரும் இடமாகும்.லேடீஸ் சீட் போன்று இங்கிருந்தும் சேலம் மாநகரை காணலாம், மேலும் இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும். இங்கு வாழ்ந்த மக்கள்  இங்கு கற்களால் ஒரு இராமர் கோவிலை கட்டியுள்ளனர்.  ஏற்காடு செல்பவர்கள் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

     

    கிளியூர் நீர்வீழ்ச்சி
     
    ற்காடு ஏரியில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. 
    சுமார் 3000 அடி உயர நீர்வீழ்ச்சி ஏற்காட்டின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்த்து வருகிறது.
    இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் ஏராளமான இயற்கைக் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறதுமழை காலங்களில் தண்ணீர் அதிகம் இருக்கும் நேரத்தில் இங்கு செல்வது நல்லது..
     
     
     
    சேர்வராயன் மலைக் கோயில்
     
    சேர்வராயன் மலையில். கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். இது மிகவும் பழமையும் தொன்மையும் கொண்ட..பிரசித்திப் பெற்ற கோயிலாக திகழ்கிறதுமே மாதத்தில் இந்தக் கோவிலில் நடக்கும் திருவிழா மிகப் பிரபலமாகும். 
    இத்திருத்தலத்தின் மூலவராக அருள்மிகு சேர்வராயரும் மூலவத்தாயாராக அருள்மிகு காவேரி அம்மனும் அருள்பாலிக்கின்றனர்.
    இத்திருத்தலத்திற்கு அருகில் அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கொயில் அமைந்துள்ளது.
     
     

    தாவரவியல் பூங்கா
     
    18.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800  வகையான செடிகளும் உள்ளன.  இந்தப் பூங்கா 1963ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். இங்கே தான் ஏப்ரல், மே மாதங்களில் மலர்க்கண்காட்சி நடைபெறுகின்றது.
     
     
     
    இந்த வெயில் காலத்தில் சுட்டெறிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க ஏற்காடு செல்லுங்கள்
    மனத்திற்கும்..உடலுக்கும் உற்சாகம் பெற்றிடுங்கள்........
     
     
     

    0 comments:

    Post a Comment