Thursday, 30 May 2013

Tagged Under: , ,

அறிய புகைப்படங்கள் - எவரெஸ்ட் சிகரத்தை எட்டி 60 ஆண்டுகள்'!!!

By: ram On: 09:37
  • Share The Gag






  •                  நியூசிலாந்தைச் சேர்ந்த மலையேறியான சர். எட்மண்ட் ஹிலாரி அவர்களும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகிய இருவரும் இந்த உலகின் மிகவும் உயரமான மலைச் சிகரத்தை 1953ஆம் ஆண்டும் மே மாதம் 29ஆம் தேதி அடைந்தார்கள்.






                 நியுசிலாந்தில் தேனி வளர்க்கும் தொழிலைச் செய்து வந்த சர் எட்மண்ட் ஹிலாரியும், அவரின் நேபாள ஷெர்பா டென்சிங் நோர்கேயும் அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 8848 மீட்டர் அதாவது 29 ஆயிரம் அடி இருக்கும் இச்சிகரத்தின் மீது ஏறியது மிகப் பெறும் சாதனையாக பார்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசியாக இரண்டாம் எலிசபத் முடிசூட்டப்பட்ட நாளில் இவர்கள் உலகின் உச்சத்தை அடைந்த செய்தி லண்டனை எட்டியது.

     




                   அன்று முதல் இன்று வரை எவரெஸ்ட் சிகரத்தில் 5000இற்கும் அதிகமானோர் ஏறியிருக்கிறார்கள். மனித முயற்சிக்கு இயற்கை அளிக்கும் இந்த உயரமான சவாலை எதிர் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதன் பிறகு கணிசமாக அதிகரித்தது. மலையேறுபவர்களுக்கு உதவும் கருவிகள் அறிவியல் முன்னேற்றத்தால் துல்லியமானவையாகவும் – எடை குறைந்தவையாகவும் தற்போது உள்ளன. பருவநிலையையும், மலை மீதுள்ள ஐஸ் நகருவது குறித்தும் தற்போது உறுதியான தகவல்களை உடனுக்குடன் பெறும் வசதி உள்ளது.




                   கடந்த 1990 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் ஏற வேண்டும் என்று கிளம்பியவர்களில் 18 சதவீதம்பேர்தான் உச்சியை அடைந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 56 சதமாக உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஒரே நாளில் 234 பேர் எவரெஸ்ட் சிகரத்தின் மீது கால் பதித்தினர். 30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1983 இல் ஒரே நாளில் அதிக பட்சமாக வெறும் 8 பேரால்தான் எவரெஸ்ட்டை அடையமுடிந்தது.

     



                   ஆரம்ப காலத்தில் சாதனை மனப்பாங்கு கொண்ட – அபாயமான சூழ் நிலைகளை எதிர்கொள்ளும் மனோதிடம் கொண்டவர்களே எவரெஸ்ட்டுக்கு செல்ல முடியும் என்று இருந்தது. ஆனால் தற்போது எவரெஸ்ட் மலையேற்றம் என்பது நேபாளத்தில் நான்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாக இருக்கிறது. 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டாலர்கள் வரை கொடுத்து அதற்கேற்ற வசதிகளைப் பெற்றுக் கொண்டு ஒருவர் மேலே ஏறமுடியும். எவரெஸ்ட்டுக்கான வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் – அங்காங்கே உணவு மற்றும் மருத்துவ வசதிகளும் – பணத்துக்கு சுமைகளை சுமந்து வர ஷெர்பாக்களும் இப்போது அதிகரித்துவிட்டனர்.
     



                   தற்போது மலையேறுதல் என்பது ஒரு வணிக நடவடிக்கையாக மாறிவிட்டதாகக் கூறும் விமர்சகர்கள், அங்கு அளவுக்கு அதிகமான சனக்கூட்டத்தை குறைப்பதற்காக ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால், அதனை பல மலையேறிகள் மறுக்கிறார்கள்.





    உலகின் மிக உயர்ந்த சிகரமான, எவெரெஸ்ட் மீது , 1953 மே 29ம் தேதி, சர் எட்மண்ட் ஹிலாரியும், ஷெர்பா டென்ஸிங் நோர்கேயும் முதலில் ஏறி சாதனை படைத்தனர்.






     மலையின் தெற்குப் புறமாக கடும் முயற்சிக்குப் பின் அவர்கள் உள்ளூர் நேரப்படி காலை 1130 மணிக்கு ஏறினர்






    மலையில் பல்வேறு காட்சிகளையும், ஷெர்பா டென்ஸிங் , பிரிட்டன், நேபாளம், இந்தியா மற்றும் ஐ.நா மன்றக் கொடிகளை அசைப்பதையும், படமெடுத்தார் ஹிலாரி





    சிகரத்தில் படர்ந்திருந்த பனியில், கடவுளுக்கு பிரசாதமாக, டென்ஸிங் நோர்கே, சில இனிப்புகளையும் ,பிஸ்கட்டுகளையும் புதைத்தார்.






    அடித்தள முகாமில் தேவையான வழங்கு பொருட்களை ஷெர்பாக்குழு ஒன்று எடுத்து சென்றது. புகைப்படத்தின் வலது பக்கம், லோ லா மலைச் சரிவு. அதற்கப்பால் கும்பு பனி ஏரியும், திபெத்தும் இருக்கின்றன. லோ லாவின் சரிவுகள் பார்ப்பதற்கு எளிதாக ஏறக்கூடியவை போலத் தெரிந்தாலும், அது சிகர உச்சியிலிருந்து பொழியும் பனிவீழ்ச்சியியால் அடிக்கடிப் பாதிக்கப்படும்




     நூற்றுக்கணக்கான ஷெர்பாக்கள் இந்த மலையேறும் குழுவிற்கு வேண்டிய பொருட்களைச் சுமந்து சென்றனர். இவர்களுக்கு வழிகாட்டவும் ஷெர்பாக்கள் உதவினர்.




    எடுத்துச்சென்ற பிராண வாயு குறைய ஆரம்பித்ததால், டென்சிங்கும், ஹிலாரியும், எவெரெஸ்ட் உச்சியில் 15 நிமிட நேரமே இருந்தனர்




    அவர்கள் எடுத்துச் சென்ற மலையேறும் கருவிகளில் பல அப்போதுதான் புதிதாக உருவாக்கப்பட்டவை, மேலும் அவை பரீட்சார்த்தமானவையும்கூட
     




     அவர்களது மலையேறும் முயற்சி ஏப்ரல் 12ம்தேதி ஆரம்பமானது. சிகரத்தைத் தொட்ட நல்ல செய்தி ஜுன் 2ம் தேதி, அதாவது, பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு நாளன்று, அறிவிக்கப்பட்டது






    இந்த மலையேறும் குழுவினர், அடித்தள முகாம்களுக்கிடையே கம்பியில்லா (ரேடியோ) செய்தி அனுப்பும் தூண்களை ( டவர்கள்) நிலை நிறுத்தினர். இதன் மூலம் அவர்கள் வாக்கி டாக்கி கருவிகளை பயன்படுத்தி செய்திகளை பரிமாறிக்கொண்டனர். பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா குறித்த செய்தி குறித்த வானொலி ஒலிபரப்பையும் அவர்களால் கேட்கமுடிந்தது.







    மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்டின் மீது ஏறும் முன்னர், அந்த மாதிரியான உயரமான இடத்தில் இருக்க பழகிக்கொள்ள அவர்களுக்கு ஏழு முகாம்கள் எவெரஸ்ட் சிகரத்தின் மீது ஏறும் வழியில் அமைக்கப்பட்டன






    1953ல் சென்ற இந்த பிரிட்டிஷ் மௌண்ட் எவெரெஸ்ட் மலையேறும் குழு, இந்த சிகரத்தை அடைய முயல பிரிட்டிஷ் குழுக்களினால் எடுக்கப்பட்ட ஒன்பதாவது முயற்சி. இதுதான் அந்த முயற்சிகளில் வெற்றி கண்ட முதல் முயற்சியும்கூட. 





    இந்த பயணத்திற்குத் தலைமை தாங்கியவர் கர்னல் ஜான் ஹண்ட். இதற்கு நிதி உதவி செய்த அமைப்பு, கூட்டு இமாலயக் குழு. அனைத்துப் புகைப்படங்களும் வழங்கிய அமைப்பு ராயல் ஜாக்ரபிக் சொசைட்டி மற்றும் ஐபிஜி


    0 comments:

    Post a Comment