Showing posts with label மங்கள்யான்!. Show all posts
Showing posts with label மங்கள்யான்!. Show all posts

Sunday, 1 December 2013

செவ்வாய் கிரகம் நோக்கி “மங்கள்யான்” : சாதித்து காட்டிய இந்தியா!

By: ram On: 07:35
  • Share The Gag
  •  

    நொடிக்கு 647.96 மைல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கும் மங்கல்யான் செயற்கைக்கோள் நேற்று வரை பயணித்த புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை வெற்றிகரமாக துவக்கியது.இதன் மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் நவம்பர் 16ம் தேதி, பூமியில் இருந்து, 1,92,874 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

    இன்று அதிகாலை, 12:30 மணிக்கு ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் செவ்வாய் கிரக பாதையை நோக்கி திருப்பப்ட்டது. தொடந்து 12.49 மணிக்கு மங்கல்யான் செயற்கைக்கோளை செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகம் நோக்கி தனது 68 கோடி கி.மீ பயணத்தை துவக்கியது. அண்மையில் சீனா செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பிய விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேற முடியாமல் தோல்வியடைந்தது. இதை அடுத்து இந்தியாவின் மங்கல்யான் பயணத்தை சீனா உள்ளிட்ட நாடுகள் கூர்மையாக கவனித்து வந்த நிலையில், மங்கள்யானின் இந்த வெற்றி விண்வெளி துறையில் இந்தியாவின் சாதனை பெருமைக்குரியதுதானே?

    Friday, 22 November 2013

    மங்கல்யான் செயற்கைக்கோள் அனுப்பிய முதல் படம்!

    By: ram On: 22:07
  • Share The Gag

  • மங்கல்யான் செயற்கைக்கோள் அனுப்பிய முதல் படம் 'ஹெலன் புயல்'


    ஸ்ரீஹரிக்கோட்டா; செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து கடந்த 5ம் தேதி மங்கல்யான் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.


     தற்போது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் மங்கல்யான், தனது முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.

    தற்போது ஆந்திர மாநிலத்தை அச்சுறுத்தி வரும் ஹெலன் புயலின் நிலையைதான் மங்கல்யான் தனது முதல் புகைப்படமாக அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Saturday, 9 November 2013

    மங்கள்யானின் புவி வட்டப் பாதை 3வது சுற்று அதிகரிப்பு!

    By: ram On: 18:04
  • Share The Gag

  •  



    செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான், புவி வட்டப் பாதையை அதிகரிக்கும் 3வது சுற்றுப் பாதை இன்று காலை துவங்கியது.

    40,186 கி.மீ. ஆக இருந்த சுற்றுப்பாதை தற்போது 71,363 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல அடுத்தடுத்து 4 மற்றும் 5வது சுற்றுப் பாதைகள் மூலம், புவி வட்டப் பாதையின் தூரம் அதிகரிக்கப்பட உள்ளது.