Tuesday 7 October 2014

Tagged Under:

சிறுமியின் உயிரை பறித்த தொலைக்காட்சி பெட்டி !!

By: ram On: 20:16
  • Share The Gag
  • கனடாவில் கல்கரியில் 6 வயது சிறுமியின் மேல் தொலைக்காட்சி பெட்டி கவிழ்ந்து விழுந்ததில் சிறுமி பரிதாபமாக பலியானார்.

    கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் கல்கரி மாகாணத்தை சேர்ந்த 6 வயது சிறுமியே பரிதாபமாக பலியானார்.

    கடந்த 19ம் திகதி மாலை 7 மணிக்கு முன்பாக இச்சம்பவம் நடந்துள்ளது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே சிறுமி இறந்து விட்டாள்.

    பெற்றோர்கள் ஆழ்ந்த துயரத்தில் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் சேவையின் ஆதரவில் உள்ளனர், தொலைக்காட்சி விழுந்து காயப்படுதல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    2013ம் ஆண்டில் வெளிவந்த குழந்தை மருத்துவ பத்திரிகையொன்றின் அறிக்கை படி, அமெரிக்காவில் கடந்த 20 வருட காலப் பகுதியில் 200,000 வரையிலான பிள்ளைகள் தொலைக்காட்சி விழுந்து காயப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    பின்வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் படி குடும்பங்களிற்கு கனடா பொது சுகாதார பகுதி பரிந்துரைக்கின்றது.

    - பிள்ளைகளை எப்போதும் கண்காணிக்க வேண்டும். தளபாடங்களில் ஏறுவது தள்ளுவது தவறு என கூறவேண்டும்.

    - புத்தக அலுமாரி, அலுமாரிகள், தொலைக்காட்சி ஸ்ரான்ட்ஸ் போன்றனவற்றை நிலையான பரந்த அடித்தளத்தில் வைக்கவும், கால்கள் சில்லுகள் உள்ள மாடல்கள் கவிழக்கூடியவை.

    - தளபாடங்களை கோண பிரேசர்கள், பாதுகாப்பு பட்டைகள் போன்றவற்றுடன் இணைத்து வைக்கவும் முடிந்தால் பாதுகாப்பாக ஆணி அடித்து வைக்கவும்.

    - நிலையான தளபாடத்தில் மிகவும் பின்னால் தொலைபேசியை வைக்கவும். தொலைபேசியின் அளவையம் பாரத்தையும் தாங்க கூடிய அதற்கென தயாரிக்கப்பட்ட தளபாடத்தில் தொலைக்காட்சியை வைக்கவும்.

    - பிள்ளைகளை ஈர்க்கும் பொருட்களான விளையாட்டு பொருட்கள், மரங்கள், ரிமோட் கொன்ரோல் போன்றவற்றை தொலைக்காட்சிக்கு மேல் அல்லது தொலைக்காட்சி வைக்கப் பட்டிருக்கும் தளபாடத்தில் வைப்பதை தவிர்க்கவும்.

    -மின்சார வயர்களை தளபாடத்திற்கு பின்னால் பிள்ளைகள் அடைய முடியாத வகையில் வைக்கவும்.

    0 comments:

    Post a Comment