Thursday 9 October 2014

ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கான டிப்ஸ்! உஷார்

By: ram On: 23:08
  • Share The Gag
  • எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர்வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் பி.கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணனா

    ”ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே  செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என சில விஷயங்கள் இதில் உள்ளன. கடந்த மார்ச் மாதம்கூட  TimTara என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டார். அந்த இணையதளமும் அதன்பின்னர் மூடப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.

    கவர்ச்சி விளம்பரங்கள்!

    கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டிபோட கடைசியில், யாராவது ஒருவருக்கு மட்டுமே அந்தப் பொருள் கிடைக்கும் என்று சொல்லிவிடும். ஆனால், ஏற்கெனவே கட்டிய பணத்தைத் திரும்பத் தரமாட்டோம், அதற்கு பதில் ஏதேனும் பொருள் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லும். வேறு வழியில்லாமல் நாம் வாங்கும் இந்தப் பொருள், கடையில் விற்கும் விலையைவிட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

    இரண்டு நிமிட நிபந்தனை!

    இந்த ஏமாற்று வித்தையில் வேடிக்கையான விஷயம்,  வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்துமுடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகின்றன. அதாவது, பொருளை வாங்க இரண்டு நிமிடங்களே அவகாசம் தரும். இதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்வதால், நாம் பரபரப்புக்குள்ளாவோம்.  ஏற்கெனவே பணம் கட்டிவிட்டோம்; எனவே, இரண்டு நிமிடத்தில் பொருளை வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்டிய பணம் போய்விடும் என்கிற அவசரத்தில்தான் நாம் செயல்படுவோம். இந்த இரண்டு நிமிடத்தில் பொருட்களை சரியாக புக் செய்ய முடியாமல் பணத்தை இழக்கிறார்கள் பலர்.

    மறைமுக கட்டணங்கள்!

    இன்னும் சில இணையதளங்கள் Free Trail, Half Price, போன்று பல ஆஃபர்களை தருகின்றன. இதிலும், பெரும்பாலும் நடப்பது மோசடியே. உண்மையில் இவர்கள் மறைமுக கட்டணங்கள் (Hidden Charges) என்ற பெயரில் அதிகமான பணத்தை உங்களிடமிருந்து கறந்துவிடுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைக் கேட்க மாட்டார்கள். இதேபோல, திடீரென இலவச போன், கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது.

    ஷிப்பிங் கட்டண மோசடி!

    உண்மையாக வாடிக்கையாளர்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் தளங்கள், டிவி வாங்கினால்கூட அதை கொண்டுவந்து தருவதற்கு எந்தக் கட்டணத்தையும் கேட்காது.  அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொருளை கொண்டுவந்து தர அதிக கட்டணம் கேட்கும் இணையதளங்களை  நம்பக்கூடாது. இதில் இ-பே மட்டும் விதிவிலக்கு, காரணம், அந்தத் தளத்தில் பொருட்களை விற்பவர்கள் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விலை குறைவாக தருவதால் பொருட்களை கொண்டுவந்து சேர்க்க கட்டணம் கேட்கலாம்.

    நோ ரிட்டர்ன், ப்ளீஸ்!

    பொருட்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும்போது அளவு சரியாக இல்லை என்றால், அதைத் திரும்ப அனுப்பும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிவது அவசியம். ஆனால், ஆர்டர் செய்த பொருளைத் திரும்ப அனுப்பும் முன்பு நீங்கள் அதை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

    விதிமுறைகளில் மோசடி!

    சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதிமுறைகளை பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கியமான விதிமுறைகளை நம் கண்ணுக்கு தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறிவிட்டு, பொருட்களை வாங்கிய பின்னர் அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெரிவித்தால், நாங்கள்தான் விதிமுறைகளை ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம் என்பார்கள். பெரும்பாலும் பொருட்களை ரிட்டர்ன் எடுத்துக்கொள்வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.

    கூரியர் மோசடி!

    ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்திருக்கும் பொருளானது கூரியர் மூலமாக நமக்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கூரியரை பிரித்து பார்க்கும்போது அந்தப் பொருளானது இல்லாமல்கூட இருக்கலாம். வீட்டுக்கு வந்த கூரியரில் பொருள் ஏதும் இல்லை எனில், உடனே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பியதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாமல்போனால், அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கலாம். சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மூன்றாம் நபர் விற்பனையாளர்களைக்கொண்டு செயல்படுவதால் அவர்களாலும் ஏமாற்றப்படலாம், ஜாக்கிரதை.

    வாரன்டி இருக்கிறதா?

    பல இணையதளங்கள் உற்பத்தியாளர் வாரன்டியுடன்தான் (Manufacturer Warranty)பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையைவிட மிகக் குறைவாக இருந்தால், உற்பத்தியாளர் வாரன்டி தராமல் மோசடி செய்துவிடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற்கான பொறுப்பு அந்த ஆன்லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மை குழப்பி ஏமாற்றிவிடும்.

    உஷாரய்யா உஷாரு!

    ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இப்படி நடக்கும் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் இருக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

    * பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100 அல்லது 200-க்கு தருகிறோம் என்று சொல்லும் தளங்களை ஒதுக்குவது நல்லது.

    * பொருள் ஏலத்தில் (Auction, Bid) விற்கப்படும்போது பொருளின் விலை சந்தை விலையைவிட சற்றே குறைவாக மட்டுமே இருக்கவேண்டும். மிக அதிக விலையுள்ள பொருளை, மிகக் குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்றால் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது.

    * நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார்ப்பதும் அவசியம். சில தளங்களில் எழுத்துப்பிழை போன்று இருந்தாலும், அவை போலி பொருட்களை அவ்வாறு விற்கின்றன. உதாரணம்,Nokia – Noika, Samsung Galaxy Note – Galaxy Note..

    *பொருளை வாங்கும்போது, அதை ஏற்கெனவே வாங்கியவர்களின் கருத்தை வாங்கும் தளத்திலோ அல்லது இணையத்திலோ தேடிவிட்டு வாங்க வேண்டும்.

    * ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்குவதற்கான வேலையில் இறங்குவது நல்லது. அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும்.

    * கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள்.  இல்லை என்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிற மாதிரி (Cash On Delivery) வைத்துக்கொள்ளுங்கள்.

    * முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொருள் வாங்குபவர்கள் அதுகுறித்து நன்கு பரிச்சயம் கொண்டவர் மூலம் வாங்கலாம்.

    * ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை பொருள் உங்களுக்கு கிடைக்கும் வரை பத்திரமாக வைத்திருக்கவும்.”

    படம் சுமார், வசூல் மட்டும் வந்தது எப்படி?

    By: ram On: 22:38
  • Share The Gag
  •  பாலிவுட் சூப்பர் ஹீரோ ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பேங் பேங். இப்படம் விமர்சனங்களால் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

    திரைப்பிரபலங்கள் பலர் ’இந்த படத்திற்கு தான், இத்தனை பில்டப்பா?’ என்று கூற, படத்தின் வசூல் அவர்கள் வாயை எல்லாம் அடைத்து விட்டது.

    தற்போது வரை இப்படம் ரூ 200 கோடியை தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட் கூறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஹிரித்திக் இப்படத்திற்காக பல காட்சிகளில் தன் உயிரை பணையம் வைத்து நடித்துள்ளார். இந்த உழைப்பு தான் படத்தின் வெற்றிக்கு காரணம் என படக்குழு தெரிவித்துள்ளது.

    அஜித்திற்கு கிடைத்த வெற்றி விஜய்க்கு கிடைக்குமா?

    By: ram On: 20:11
  • Share The Gag
  • அஜித்-விஜய் தான் தற்போதைய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்ஸ். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் போட்டி போட்டுக் கொண்டு படத்தை வாங்குவார்கள்.

    அந்த வகையில் சென்ற வருடம் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தின் வெளிநாட்டு உரிமத்தை ஜி.கே.மீடியா வாங்கியது. படமும் மாபெரும் வெற்றியடைந்தது.

    அதே போல் இந்த வருடம் கத்தி படத்தின் ஓவர்சிஸ் வெளியீட்டு உரிமையை இந்நிறுவனமே வாங்கியுள்ளது. ஆரம்பத்திற்கு கிடைத்த வெற்றி, கத்திக்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி

    By: ram On: 19:56
  • Share The Gag
  • நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.

    ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.

    நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.

    அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.

    இரண்டாவது மோசடி:

    சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.

    916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.

    மூன்றாவது மோசடி:

    தங்கத்துக்கு இன்றைய காலத்தில் இரண்டு விலை உள்ளது. ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் தயார் செய்வதற்கான கூலியாகும். ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால் ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.

    ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு *சேதாரம்* என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.

    அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர். அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.

    நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாக ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது.
    நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது.  துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.  இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை.

    அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான்.  ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.

    இதற்கெல்லாம் ஒரே தீர்வு தங்கத்தின் மீது வைத்துள்ள மோகத்தை குறைப்பதுதான். படித்த நம்மிலிருந்து ஆரம்பிக்கட்டும்.

    அஜித்துக்கு தெரியாமல் கௌதம் மேனன் வைத்த டுவிஸ்ட்?

    By: ram On: 16:54
  • Share The Gag
  • தல-55 படத்தின் டைட்டில் இன்னும் வைக்காத நிலையில், படத்தின் எதிர்பார்ப்பு விண்ணை முட்டுகிறது. படத்தை பற்றி பல சுவாரசிய தகவல்கள் வந்து கொண்டிருக்க, தற்போது மேலும் பல சுவையான தகவல்கள் வந்துள்ளது.

    சமீபத்தில் இப்படம் குறித்து மனம் திறந்துள்ளார் கௌதம். இதில் எப்போதும் அஜித் படத்தில் பார்க்கும் கமர்ஷியல் பார்முலா இதில் இருக்காதாம். ஒரு சாமனிய மனிதன் தன் 29 வயதில் இருந்து 39 வயது வரை பயணிக்கும் ஒரு ட்ராவல் சம்மந்தப்பட்ட கதையாம்.

    மேலும் இதுநாள் வரை படத்தின் கிளைமேக்ஸ் அஜித்திற்கு தெரியாதாம். அதை கௌதம் மேனனுன் தற்போதைக்கு சொல்வதாக இல்லையாம், அந்த கிளைமேக்ஸ் என்ன என்பதை அறிய, அஜித்தே மிக ஆவலாக இருப்பதாக கௌதம் தன் வழக்கமான புன்னகையால் கூறியுள்ளார்.

    இணையத்தில் 2014-ல் 'கவனிக்கத்தக்கவர்' தனுஷ்: 'வைரஸ்' அம்புகளில் முதலிடம்!

    By: ram On: 08:16
  • Share The Gag
  •  தமிழ் சினிமா நட்சத்திரங்களில், இணையவாசிகள் மத்தியில் நடப்பு ஆண்டில் அதிகம் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் தனுஷ்தான் என்பது தெரியவந்துள்ளது.

    பிரபல 'ஆன்டி வைரஸ்' மற்றும் இணையப் பாதுகாப்பு நிறுவனமான மெக்கஃபே (McAfee) வெளியிட்டுள்ள 'வைரஸ் அம்புகள்' ஆய்வின் முடிவில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இணையத்தில் நடிகர் தனுஷ் பெற்றுள்ள இந்தச் சிறப்பிடம், கடந்த 2013-ல் நடிகை த்ரிஷா வசம் இருந்தது நினைவுகூரத்தக்கது.

    திரையுலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை பற்றியும், தகவல்களைப் பற்றியும் உடனடியாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற மக்களின் ஆர்வத்தை தவறான வழியில் உபயோகிக்கிறார்கள் இணைய குற்றவாளிகள்.

    இணையத் தேடல்களின்போது, பயனாளிகளின் கவனத்தைத் திசைத்திருப்பவும், தங்கள் சம்பந்தப்பட்ட தவறான வலைதளங்களுக்கு அவர்களைக் கொண்டு செல்லவும் இணைய விஷமிகளால் வைரஸ்கள் உருவாக்கப்படுவது வழக்கம்.

    இத்தகைய வைரஸ்கள் இருக்கும் தளத்திற்கு பயனர்களை வரவழைக்க, இணையத்தில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகளின் பெயர்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில், நடப்பு 2014-ல் நடிகர் தனுஷின் பெயர் அப்படி அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மெக்கஃபே தனது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.

    தனுஷின் பெயரில் இருக்கும் செய்திகளை மக்கள் ஆர்வமாகச் சென்று பார்ப்பதால், அப்படிப் பட்ட இணப்புகளில் (லிங்க்) இருக்கும் தளங்களில் வைரஸ் பாதிப்பு இருக்கும். இத்தகைய வைரஸ்களால் சிக்கும் பயனாளிகள் தவறான வலைத்தளங்களுக்கு வலுக்கட்டாயமாக உந்திச் சென்று தங்களது தனிப்பட்ட தகவல்களையும் தரவுகளையும் இழக்க நேரிடுவது குறிப்பிடத்தக்கது. அந்த விவரங்களை இணைய விஷமிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்வது உண்டு.

    இப்படி இணையத்தில் இந்த ஆண்டு அதிக பரபரப்பை ஏற்படுத்திய தமிழ் சினிமா நட்சத்திரம் என்ற சிறப்பிடத்தை தனுஷுக்கு வழங்குவதாக மெக்கஃபே அறிவித்துள்ளது.

    இந்த ஆண்டு இணைய மக்கள் மேற்கொண்ட தேடல்களில் பலவும் ஒரு பிரபலத்தின் பெயரோடு, படங்கள், வீடியோக்கள், செல்ஃபி போன்றவற்றை தேடியதன் விளைவாக இதுபோன்ற ஆபத்தான வலைதளங்களை அடைந்துள்ளனர்.

    இந்த ஆய்வை பற்றி மேக்கஃபே துணைத் தலைவர் வெங்கட் கிருஷ்ணபுர் கூறும்போது, "இதுபோன்று பல நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்டு தேடல்களை மேற்கொள்வதை அறிந்து, இணைய விஷமிகள், இணையத்தில் பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் தவறான தளங்கள் மூலமாக பிரபலங்களுடைய ரசிகர்களின் விவரங்களை சேகரித்து, அவற்றைத் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். புது படங்கள், டி.வி. நிகழ்ச்சிகள், பிரபலங்கள் உருவாக்கும் புதிய டிரெண்டுகளை தங்களுக்குச் சாதகமாக இணைய விஷமிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர்" என்றார்.

    மெக்கஃபே-வின் இந்த ஆய்வில் முதலிடத்தில் இருக்கிறார் தனுஷ். அமிதாப் பச்சனுடன் இணைந்து தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள 'ஷமிதாப்' திரைப்படம் இணையத்தில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. இந்த இணையத் தேடலில் 66 ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுள்ளது.

    தமிழ் சினிமா நட்சத்திர வரிசையில் நடிகர் ஆர்யா இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆர்யாவின் தயாரிப்பில் வெளியான 'அமர காவியம்' திரைப்படம் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பற்றிய இணையத் தேடல்கள் 59 ஆபத்துகள் விளைந்துள்ளன.

    சிம்புவுடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் 'இது நம்ம ஆளு' படம், நடிகை நயன்தாராவை இந்த ஆய்வில் மூன்றாம் இடத்தை பிடிக்கச் செய்துள்ளது. நயன்தாரா பற்றிய தகவல்களுடன் 58 ஆபத்து விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

    சமீபத்தில் தனுஷ், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்கள் என்ற மைல்கல்லை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    காலையிலும் இரவிலும் தொலைக்காட்சிகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருக்கலாம் !!

    By: ram On: 07:57
  • Share The Gag
  • ஒரு படத்தில் வடிவேல் கிட்ட மயில்சாமி சொல்லுவார் இந்த தாயத்தை கட்டிக்கிட்டு நீ இரவு 12 மணிக்கு கூட சுடுகாட்டிற்கு போகலாம் என்று சொல்லுவார் அதற்கு வடிவேலு நாங்க ஏண்டா 12 மணிக்கு சுடுகாட்டிற்கு போறோம் காச தாட போறேன் என்று சொல்லுவார் இது ஒரு நகைசுவையாக இருந்தாலும் நிறைய சிந்திபதற்கு விடையம் இருக்கிறது அதை போல இரவு 12 மணிக்கு மேலதான் இந்த மாதிரியான ராசிக்கல் போன்ற விளபரங்கள் வருகிறது சில முன்னணி தொலைகாட்சிகளில் அதை பற்றிய ஒரு பார்வை.

    ராசிக்கல் உடம்பு இளைக்க ஏற்ற, செக்ஸ் பிரச்சனையா இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும் என்று நம்பர் தந்திருக்கும் தெரியாமல் மிஸ்கால் குடுத்துவிட்டால் அடுத்த நிமிடமே நமக்கு அழைப்பு வரும் முதலில் ராசிக்கல் விளம்பரத்தை பார்த்தவுடன் ஏமாந்து வாங்கினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று 2000 ரூபாய்க்கு வாங்குகிறார்கள் அதன் உண்மையான மதிப்பு 5 ரூபாய் மட்டுமே மந்திர தந்திரங்கள் செய்தது என்று கூறி விற்கப்படுகிறது. உடம்பு இளைக்க ஏற்ற தரப்படும் மருந்து சாதாரண எதிர்ப்பு சக்தி கூட இல்லாத மருந்து.செக்ஸ் பிரச்சனை பலருக்கும் இருக்கிறது 52 வகையான ஆயுர்வேத மூலிகையால் செய்யப்பட்டது இதை நீங்கள் சாப்பிட்டால் அறை மணி நேரத்திற்கும் மேல் உடலுறவு கொள்ளலாம் என்று சொல்லுவார்கள் வாங்கிய பின்பு 5 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத மருந்து என்று அவர்களுக்கு தெரியும் ஆனால் இதன் விலை 4000

    இவர்கள் அனைவரும் வடநாட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் சென்னயில் ஏதாவது ஒரு பெரிய வீட்டை வாடகை எடுத்து அரசாங்கத்திற்கு தெரியாமல் நடத்துபவர்கள் ஆனால் நீங்கள் போனில் கேட்டால் டெல்லியில் இருக்கிறோம் உங்கள் முகவரியை அனுப்பினால் உங்கள் வீட்டுக்கே ஒரு வாரத்தில் அனுப்பி வைத்து விடுகிறொம் என்பார்கள் அங்கு வேலை செய்யும் நபர்கள் பெரும்பாலும் உண்மையை சொல்ல மாட்டார்கள் சென்னயில் ஏதோ மூலையில் தான் இருப்பார்கள் ஆனால் டெல்லியில் இருப்பதாக சொல்லுவார்கள் இதில் அனுப்பப்படும் தரமில்லை மாற்றி அனுப்புங்கள் என்று கூறினால் பதிலே இருக்காது.

    இதில் ஏமாறுவது அப்பாவி ஏழை மக்கள் தான் அதுவும் அன்றாடங்காய்ச்சிகள் என்பது தான் வேதனையான விஷயம்