Thursday 2 October 2014

Tagged Under: , ,

யான் - திரைவிமர்சனம் - விரைவில் மூட்டையைக் கட்டிவிடும்...!

By: ram On: 14:28
  • Share The Gag

  • பாட்டியோட வருமானத்தில காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கிற படித்த வேலையில்லா பட்டதாரி சந்த்ரு. ஏடிஎம்மில் சந்திக்கும் ஸ்ரீலா மீது பார்த்த உடனேயே காதல் வருகிறது. அவர் பின்னாலேயே சுற்றி ஒரு வழியாக அவரது மனத்தையும் கவர்கிறார். ஸ்ரீலாவின் அப்பாவை சந்திக்க வரச் சொல்கிறார்கள். “ஏம்பா… நீ என்ன ஒரு வேலையும் பார்க்காம பாட்டியோட சம்பாத்தியத்தில உட்கார்ந்து சாப்பிடுறியா…?” என்று ஸ்ரீலாவின் அப்பா கேட்டுவிட, சந்த்ருவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வருகிறது. “யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசின… நான் படிச்ச படிப்புக்கு வேலை தேடிட்டு வந்து நிற்கிறேன் பாரு…” என்று ஆவேசமாக சவடால்… சாரி… சவால் விட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். வேலையை தேடுறாரு… தேடுறாரு… ஆனா ஒரு பயலும் வேலை கொடுக்க மாட்டேங்கிறான்… சரி இங்கே இப்படியே இருந்தா சரிவராதுன்னு முடிவு பண்ற சந்த்ரு, வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புற ஏஜென்ட் மூலமா பலிஸிஸ்தான் போகிறார். அங்க போய் இறங்கினா… போலீஸ் சந்த்ருவை கைது பண்றாங்க… அவர்களிடம் இருந்து தப்பித்தாரா சந்த்ரு என்பது மீதி கதை.

    மும்பையில் ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொல்வதாக ஆரம்பிக்கிறது படம். அந்த நேரத்தில் அங்கு உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் ஸ்ரீலாவை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் செல்கிறார் சந்த்ரு. இந்த முதல் சந்திப்பு அவர் மீது காதலை வர வைக்கிறது. இதனால் ஸ்ரீலாவை கவரும் நோக்கில் ஒவ்வொரு செயலையும் செய்கிறார் சந்த்ரு. இவையெல்லாமே டெம்ப்ளேட்டான தமிழ் சினிமா காட்சிகள். அதுவும் ஸ்ரீலா தனது முகவரி விசிட்டிங் கார்டை சந்த்ருவிடம் கொடுப்பதும் அதை அவர் தவறவிடுவதும் அதைப் பிடிக்க கார்டு பின்னாலயே ஓடிப் போவதும்… ஒரு விசிட்டிங் கார்டை  கதாநாயகன் கைப்பற்ற தயாரிப்பாளர் எத்தனை லட்சங்களை செலவு செய்தாரோ…

    ஜீவா துளசி பின்னாலேயே அலைவதிலேயே ஒரு மணி நேரம் ஓடிப் போகிறது. அதன் பிறகு அப்பா நாசரை அவர் சந்திக்கப் போக, அவர் ஜீவாவுக்கு வேலை இல்லாதது பற்றி பேச அதற்கு உணர்ச்சி வசப்படுகிறார் ஜீவா. உடனே கோபித்துக் கொண்டு வெளிநாடு செல்கிறார். அங்கு காவல்துறையினர் அவரை கைது செய்கிறார்கள். முதல் பாதி இப்படி என்றால், இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் செம த்ரில்லாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஓரளவு த்ரில்லான காட்சிகளாக நகருகிறது.

    மும்பையில் நடக்கும் கதை, பெலிக்ஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் என சாதாரண ரசிகர்களை விட்டு வெகு தூரத்தில் நடப்பதாக இருக்கிறது படத்தின் கதை. ரசிகர்களை இம்ப்ரஸ் பண்ணும் விதத்தில் பெரும்பாலான காட்சிகள் இல்லாதது கூட ஒரு குறைதான். இதுவே ரசிகனுக்கும் படத்திற்குமான தூரத்தை அதிகப்படுத்திவிடுகிறது. பாலை வனத்தில் எல்லைப் பகுதியில் முள்வேலி அமைத்து பார்டர் என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் காட்சியில் வெறும் ஆங்கிலம் மட்டுமல்லாமல் அரபு மொழியிலும் எழுதியிருந்தால் அந்த சீரியஸ் காட்சியில் தியேட்டரில் குலுங்கி குலுங்கி சிரிக்கும் சிரிப்பை குறைத்திருக்கலாம்.

    1 comments:

    1. படம் பார்க்கவா வேணாமா ?

      அன்புச் சகோதரன்...
      ம.தி.சுதா
      WWW.mathisutha.COM

      ReplyDelete