Monday 20 October 2014

Tagged Under:

வாகனம் பராமரிக்க சில டிப்ஸ்….உங்களுக்காக...!

By: ram On: 00:38
  • Share The Gag
  • * வாகனங்களை வாரம் ஒருமுறை வீட்டிலேயே வாட்டர் வாஷ் செய்யவேண்டும். இன்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன்ஸ் போன்றவற்றில் ஆயில் லீக் இருக்கிறதா, பேட்டரியில் டிஸ்டில்டு வாட்டர் அளவு சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும்.

    * பைக்கில் செல்ஃப் ஸ்டார்ட் இருந்தாலும், காலையில் முதல் தடவையாக பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது கிக் ஸ்டார்ட் செய்வது நல்லது. இதனால், பேட்டரி, செல்ஃப் மோட்டார் ஆயுள் நீடிக்கும்.

    * குறிப்பிட்ட தூரம் வாகனம் ஓடி முடித்ததும், வாகன தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் இன்ஜின் ஆயிலை மாற்றுவது நல்லது. இது, இன்ஜின் ஆயுளை நீடிக்கும்.

    * கிளட்ச் லீவரை கியர் மாற்ற மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போது லேசாக கிளட்ச் லீவரை பிடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. இதன்மூலம், இன்ஜினில் இருந்து கிடைக்கும் சக்தி முழுவதும் வீலுக்கு செல்லாமல் வீணாகும்.

    * பைக்கில் செயின் ஸ்பிராக்கெட் அதிக இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருக்கக் கூடாது. இப்படி இருந்தால் பற்கள் தேய்ந்துபோகும். இன்ஜின் இழுவை சக்தி அதிகரித்து மைலேஜ் குறையும்.

    * டயர் அடிக்கடி பஞ்சர் ஆனால் அது பலவீனம் அடைந்துவிட்டது என அர்த்தம். உடனே மாற்றிவி

    0 comments:

    Post a Comment