Monday 20 October 2014

Tagged Under: ,

2 படங்கள். 2600 தியேட்டர்கள். இதுவரை இல்லாத பிரமாண்டம்

By: ram On: 00:24
  • Share The Gag
  • தமிழ் திரையுலக வரலாற்றில் இரண்டே இரண்டு படங்கள் சுமார் 2600 தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டதாக இதுவரை வரலாறு இல்லை. கமல் மற்றும் ரஜினி இருவரது படங்கள் வெளியானபோது கூட இந்த அளவு தியேட்டர்கள் அவர்களது படங்களுக்கு புக் ஆனது இல்லை. ஆனால் முதல்முறையாக விஜய் மற்றும் விஷால் படங்களுக்காக உலகம் முழுவதும் 2600 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    விஜய், சமந்தா நடித்த ‘கத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் 1500 தியேட்டர்களில் வெளியாகவுள்ளதை தயாரிப்பாளர் கருணாகரன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த எண்ணிக்கை கத்தி திரைப்படத்தின் தமிழ் படத்திற்கு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கத்தியின் தெலுங்கு பதிப்பு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அப்போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.

    இதேபோல் விஷாலின் ‘பூஜை’ திரைப்படம் உலகம் முழுவதும் 1100 தியேட்டர்களில் வெளியாகவுள்ளதை அந்த படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான விஷால் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சேர்ந்து விஷால் திரைப்படம் ஒன்று இவ்வளவு அதிகமான தியேட்டர்களில் வெளியாவதும் இதுதான் முதல்முறை. ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அவர் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என கோலிவுட் வியப்புடன் கூறுகிறது.

    கத்தி மற்றும் பூஜை ஆகிய இரு திரைப்படங்களும் உலகம் முழுவதும் 2600 தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டதை மற்ற மொழியில் தயாரிப்பாளர்கள் வியப்புடன் நோக்கி வருகின்றனர். தமிழ்த்திரைப்படங்கள் ஹாலிவுட் படங்களுக்கு சமமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் வெளியாகவுள்ள நாள் வெகுதொலையில் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    0 comments:

    Post a Comment