Thursday 18 September 2014

Tagged Under: ,

கத்தி படத்தை கை பற்றிய ஜெயலலிதா; சரண்டரான விஜய்..! – திக் திக் நிமிடங்கள்

By: ram On: 17:02
  • Share The Gag
  • ராஜபக்சேவின் நண்பர் என்று சொல்லப்படுகிற லைகா மொபைல் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக, தீபாவளி அன்று கத்தி படம் திரைக்கு வருவது கேள்விக்குறியாகவே இருந்தது. சில தினங்களுக்கு முன் சுபாஸ்கரன் அல்லிராஜா சென்னை வந்தார். அப்போது நடைபெற்ற சில பேச்சுவார்த்தைகள்… ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேரங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.

    குறிப்பாக, கத்தி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் விவகாரம்…!

    கத்தி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்று சொல்லப்படும் ஐங்கரன் கருணாமூர்த்தி, சன் டிவிக்கு மிகவும் நெருக்கமானவர். எந்திரன் படத்தை ஆரம்பித்துவிட்டு கையில் பணமில்லாமல் அவர் தவித்தபோது அந்தப்படத்தை சன் டிவி அண்டர்டேக் பண்ணியது. அதன் மூலம் அப்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து கருணாமூர்த்தி காப்பாற்றப்பட்டார். அதோடு, கருணாமூர்த்தியிடம் புழங்கும் பணத்தில் பாதி பணம் சன் டிவியின் பணம் என்றெல்லாம் படத்துறையில் சொல்லப்பட்டு வருகிறது. இப்படியான தொழில் பந்தம் காரணமாக, கத்தி படத்தை ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே, அதன் சாட்டிலைட் ரைட்ஸை 20 கோடிக்கு சன் டிவிக்கு விற்றுவிட்டார் கருணாமூர்த்தி.

    ஆனால் விஜய் டிவியின் விசுவாசியான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கத்தி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை விஜய் டிவிக்குக் கொடுக்க வேண்டும் என விரும்பினார். சாட்டிலைட் ரைட்ஸ் விஷயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படி ஒரு கத்தியை கையில் எடுப்பார் என்பதை முன் கூட்டியே கணித்துவிட்ட கருணாமூர்த்தி, அதற்கு முன்னதாகவே… அதாவது முருகதாஸுக்கு சொல்லாமலே… சன் டிவிக்கு விற்பனை செய்தார். இப்படி எல்லாம் சாகசம் செய்து சன் டிவிக்கு விற்கப்பட்ட சாட்டிலைட் ரைட்ஸை, அவர்களிடமிருந்து திரும்ப வாங்கி தற்போது ஜெயா டிவிக்கு விற்பனை செய்திருக்கிறார்கள்.
    ஏன்..என்னாச்சு?

    கத்தி படத்துக்கு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பை காரணம் காட்டி, அப்படத்தை அரசாங்கம் தடை செய்யப்போவதாக முக்கிய இடத்திலிருந்து கத்தி தயாரிப்பாளர்களுக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி தடை செய்யப்பட்டால் தனக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பதால், இப்பிரச்சனையிலிருந்து மீள என்ன வழி என்று ஆலோசிக்கப்பட்டபோது, கத்தி சாட்டிலைட் ரைட்ஸை ஜெயா டிவிக்குக் கொடுத்தால், படத்துக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    இந்த பிரச்சனைகளை எல்லாம் சன் டிவி நிர்வாகத்திடம் தெரிவித்த கருணாமூர்த்தி, அவர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஜெயா டிவிக்கு சாட்டிலைட் ரைட்ஸை விற்றிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இன்று நடைபெறும் கத்தி படத்தின் இசைவெளியீட்டுவிழாவை ஒளிபரப்பும் உரிமையும் ஜெயா டிவிக்கே வழங்கப்பட்டிருக்கிறது. ஆக… கத்தி படம் தீபாவளிக்கு வெளியாவதை மாணவர்கள் அமைப்பு என்ன, மைனர்கள் அமைப்புகளினால் கூட இனி தடுக்க முடியாது என்கின்ற நிலை உருவாகியுள்ளது.
    சரண்டர் ஆனா விஜய்…

    கத்தி படத்திற்கு நன்மைகள் கைகூடியுள்ள நிலையில் படக்குழுவினர் அனைவரும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால் ஒருவருக்கு மட்டும் இது மகிழ்ச்சியை கொடுக்கவில்லை.  அவர் வேறு யாரும் அல்ல கதாநாயகன் விஜய் தான். கத்தி படவிவகாரத்தில் ஜெயலலிதாவை கனவுகளை தவிடுபொடியாக்கி படத்தை ரிலீஸ் செய்து நிஜத்திலும் கதாநாயகன் ஆகிவிடலாம் எனத் திட்டமிட்டார் விஜய். காரணம் தலைவா பிரச்சனையில் விஜய்யை அங்கும் இங்கும் அலையவிட்டு நொங்கெடுத்தார் ஜெயலலிதா. இதனால் கடந்த தேர்தலில் மோடியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார். ரஜினிக்கு மைசூர் அரண்மையை லிங்காவிற்காக வாடகைக்கு விட்ட மோடி… நமக்கும் ஏதாவது செய்வார் என நம்பியிருந்தார் விஜய்…

    என்ன தான் நண்பராக இருந்தாலும்… வடஇந்தியர் என்பதை  காட்டிவிட்டார் மோடி… அதாவது தற்பொழுது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் எந்த ஒரு காரியத்தையும் பஜாகவால் முன்னெடுக்க முடியாது என்று கூறிவிட்டார். சமீபத்தில் பாஜகவினர் கட்சி தாவல்களால் ஆடிப்போய்விட்டார் மோடி… எனவே ஜெயலலிதா விசயத்தில் கொஞ்சம் நிதானமாக செயல்பட முடிவு செய்துவிட்டார். விஜய்க்கு இது பெருத்தபின்னடைவை ஏற்படுத்திவிட்டது. எங்குபோனாலும் சுற்றிவளைத்து பிளாக் செய்த ஜெயலலிதாவிடம், சரணாகதியாக சரண்டர் ஆகிவிட்டார் விஜய்.

    0 comments:

    Post a Comment