Tuesday 17 December 2013

Tagged Under: , , , ,

‘சர்வதேச கடிதம் எழுதும் போட்டி- ஜன=5!’: தபால் துறை அறிவிப்பு!

By: ram On: 17:43
  • Share The Gag



  • இந்திய தபால் துறை ஆண்டுதோறும் நடத்தும் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என தபால் துறை அறிவித்துள்ளது.

    மின்னஞ்சல், குறுஞ்செய்தி, இணையம் போன்ற தகவல் தொடர்பு வளர்ச்சிக் காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் மறைந்து வருகிறது.

    இதைக் கருத்தில் கொண்டு கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் உலக அளவில் கடிதம் எழுதும் போட்டியை தபால் துறை நடத்தி வருகிறது.

    இதுகுறித்து தபால் துறை உயர் அதிகாரி,”ஆண்டுதோறும் சர்வதேச தபால் சங்கத்தின் (மய்ண்ஸ்ங்ழ்ள்ஹப் டர்ள்ற்ஹப் மய்ண்ர்ய்) சார்பில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.வரும் ஜனவரி 5-ஆம் தேதி 43-ஆவது உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் இணைத்து அனுப்ப வேண்டும். முதற்கட்டமாக மாவட்ட அளவில் சென்னையைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேற்கு மாம்பலம் ஜூப்பிளி சாலையில் உள்ள அஞ்சுகம் மேல் நிலைப்பள்ளி, மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்காக தங்கள் வளாகத்திலேயே போட்டியை நடத்த விரும்பினால், அந்தந்தப் பள்ளியிலேயே நடத்தலாம்.கடிதம் எழுதும் போட்டியில் தேர்வாகும் மாணவர்கள் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச அளவில் இந்தியா சார்பாக போட்டியில் பங்கேற்கலாம்.போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும் என்றார்” அவர்.

    இசை எப்படி வாழ்க்கையைத் தொடுகிறது என்ற தலைப்பில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, உருது, அசாமி, பஞ்சாபி, நேபாளி போன்ற மொழிகளில் ( 8-ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட எந்த மொழிகளிலும்) எழுதலாம்.

    காலை 10 மணி முதல் 11 மணி வரை போட்டி நடைபெறும்.

    இது குறித்து மேலும் விவரங்களுக்கு “துணை இயக்குநர், தலைமை தபால் அலுவலகம், சென்னை – 600002′ என்ற முகவரியிலும்,”pmgccrtcagmail.com’ என்ற இணைய தளத்திலோ அல்லது 28520048, 28520430, 28551774 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தபால் துறை அறிவித்துள்ளது.

    0 comments:

    Post a Comment