Tuesday 4 November 2014

Tagged Under: ,

விஸ்வரூபம் 2 தாமதம் - விளக்கம் அளித்த கமல்

By: ram On: 21:47
  • Share The Gag
  • விஸ்வரூபம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் விஸ்வரூபம் 2 படத்தை இயக்கி வருவது நாம் அறிந்த விஷயம்.

    ஆனால் இப்படம் வெளியாவதற்குள் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் 'உத்தம வில்லன்', ஜூது ஜோசப் இயக்கத்தில் 'பாபநாசம்' என இரண்டு படங்களை முடித்து விட்டார் கமல்.

    இந்நிலையில் விஸ்வரூபம் 2 எப்போது வெளியாகும் என கமல் அவர்கள் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, விஸ்வரூபம்' முதல் பாகத்திற்கு நேர்ந்த பிரச்சினையைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்து நான் கவலையடைந்தேன்.

    அதனால் அப்படத்தை வெளியிட காத்திருக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்போது அப்படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டேன்.

    'விஸ்வரூபம் 2'-ன் படப்பிடிப்பு, ஒரு பாடலைத் தவிர, போன வருடம் அக்டோபர் மாதமே முடிந்துவிட்டது. தயாரிப்புப் பணிகள் தாமதமாவதால் இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

    0 comments:

    Post a Comment