Tuesday 21 October 2014

Tagged Under:

பல கோடி லாட்டரி பரிசு மோசடி கும்பல்…

By: ram On: 23:32
  • Share The Gag
  • பல லட்சம், பல கோடி லாட்டரி விழுந்திருப்பதாக பலருக்கும் மெயில்  அனுப்பி மோசடி செய்த பலே கும்பல் இறுதியாக ரிசர்வ் பாங்க் கவர்னருக்கே இங்கிலாந்திலிருந்து ஐந்து கோடி விழுந்திருப்பதாக மெயில் அனுப்பி உள்ளதாம்.?.

    சமீப காலமாக இணைய தளங்களை மோசடி கும்பல் பயன்படுத்தி வருகிறது. அதில் திடீர் என்று உங்களுக்கு பல கோடி லாட்டரி பரிசு விழுந்திருக்கிறது.  இ.மெயில் ஐ.டி. பெயர், வங்கி கணக்கு எண் தெரிவியுங்கள் என்று வரும். சிலர் பரிசு பணம் பெற டெபாசிட்டும் கேட்பார்கள்.

    இதை நம்பி நீங்கள் விவரம் தெரிவித்தால் அவ்வளவுதான் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நூதன முறையில் மாற்றி அபேஸ் செய்து விடுவார்கள். இதுபற்றி ரிசர்வ் வங்கி எற்கனவே எச்சரிக்கை விடுத்து உஷார்படுத்தி உள்ளது.

    தற்போது ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் பெயரில் போலி கடிதம் இ.மெயில்களில் உலா வருகிறது. உங்கள் கணக்குக்கு இங்கிலாந்தில் இருந்து ரூ.5 கோடி பணம் வந்துள்ளது. நீண்ட காலமாக அது பயன்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது அந்த பணத்தை பயன்படுத்த உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம். எனவே உங்கள் பெயர், விலாசம், இ.மெயில் ஐ.டி., வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் பெயரில் போலியாக இந்த கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. கடிதத்தில் அவரது போட்டோவும் இடம் பெற்றுள்ளது.

    இணையதள மோசடி கும்பல் இந்த போலி கடிதங்களை அனுப்பி வருகிறது. எனவே போலி கடிதங்களை நம்பாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    0 comments:

    Post a Comment