Friday 19 September 2014

Tagged Under:

விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் விட்டவர்களையே உலகம் கண்டுகொள்கிறது...

By: ram On: 19:14
  • Share The Gag
  • கடும் கோபத்துடன் காணப்பட்டார் காலையில் நான் சந்தித்த நண்பர் ஒருவர் ....
    ”என்ன?” வென்று கேட்டேன் ..

    நண்பர்கள் சிலர் அவரைக் கடுமையாக விமரிசித்து விட்டார்களாம்..அதனால்தான் இந்தக் கோபமாம்...!!!
    ...நான் அவரை அமைதிப்படுத்தினேன் ...நண்பர் கொந்தளிப்போடு கூறினார்...

    ”அமைதியாக இருப்பதற்கு நான் ஒன்றும் அன்னை தெரசா அல்ல..”....

    நான் சிரித்தபடி கூறினேன்...”அன்னை தெரசா சந்திக்காத விமரிசனங்களா ..அவமானங்களா..?”
    நண்பர் அமைதியாய் என்னை உற்றுப் பார்த்துக் கேட்டார்..”மதர் தெரசா பற்றி விமரிசனங்களா..?”
    “வீட்டுக்குப் போய் லிங்க் அனுப்புகிறேன் ..படிச்சுப் பாருங்க..” என்றேன்.....நண்பருக்கு அனுப்பிய லிங்கில் இருந்து சில விமரிசனங்கள் மட்டும் இங்கே....

    # தெரேசா தன் பிறந்த ஊரான அல்பேனியாவில் இருந்திருந்தால் இவ்வளவு புகழ் பெற்று இருக்க மாட்டார். அந்த அல்பேனியா இந்தியாவை விட மிகவும் ஏழ்மையான நாடு. தம் மக்களுக்கு தொண்டு செய்வதை விட்டு இவருக்கு இங்கே என்ன வேலை? நீண்ட நெடுநாளைய மதம் பரப்பும் திட்டத்திற்கு வாடிகனால் தேர்வு செய்யப்பட்டு இங்கே சோனியாவை இறக்குமதி செய்தது போல் இவரையும் இறக்குமதி செய்தார்கள்.

    # பல சமயம் அவர் நோய்வாய்ப் பட்டால் இங்கே சிகிச்சை மேற்கொள்ளாமல் பாஸ்டன் போன்ற வெளிநாட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.

    # அவர் நடத்தி வந்த ”மிஷனரிஸ் ஆஃப் சாரிடிஸ்” என்ற நிறுவனம் உலகில் மிகவும் பணம் படைத்த ஒன்று. இவர்களது வெளிநாட்டு வங்கி நியூயார்கில் உள்ளது. அதில் கரண்ட் கணக்கில் வைத்திருந்த தொகை 50 மில்லியன் டாலர்களுக்குமேல். இருந்தும் தங்களிடம் பணம் இல்லை என்று சொல்லி மேன்மேலும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்று வந்தார்.

    # அவர் ஏன் கல்கத்தாவை தனது சேவைசெய்யும் இடமாக தேர்ந்தெடுத்தார் என்றால் ....இங்கே தான் ஜனத்தொகையும் ஏழ்மையும் அதிகம். இது தன் ” மிஷினரிஸ் ஆஃப் சாரிடி” நிறுவனத்தை வலுபடுத்த ...ஏழ்மையை பறைசாற்றி உலக கிருஸ்துவ பணக்காரர்களிடமிருந்து நன்கொடை பெற முடியும் என்பதை உணர்ந்திருந்தார்...

    # லிங்கைப் படித்து விட்டு நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்...”என்னங்க ஜான்...இவ்வளவு விமரிசனங்களா..? ஒரு விமரிசனத்திற்கே நம் முகம் சுருங்கிப் போகிறதே...இவ்வளவு விமரிசனங்களால்தான் அன்னை தெரசாவின் முகத்தில் இவ்வளவு சுருக்கங்களா ..?”

    நான் படித்த ஒரு பதிவை நண்பருக்கு பதிலாகத் தந்தேன்....

    “அன்னை தெரசாவின் முகச்சுருக்கங்கள்,
    உலக அமைதியின் பிரசவ தழும்புகள்…”

    # ஆம்...விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் விட்டவர்களையே உலகம் கண்டுகொள்கிறது...!

    0 comments:

    Post a Comment