Tuesday 16 September 2014

Tagged Under:

வெளிநாட்டு மகனின் தந்தையின் கண்ணீர்…

By: ram On: 19:11
  • Share The Gag
  •  வெளிநாட்டு மகனின் தந்தையின் கண்ணீர்…
    வாங்கிய கடனுக்காக நகையை வட்டி கடையிலும்,
    பத்திரத்தை வங்கியிலும்,
    என் மகனை வெளிநாட்டிலும் அடகு வைத்தேன்
    கண்டிபாக ஒரு நாள் அவனையும் மீட்டுவிடுவேன்
    ஆனால் அவன் இல்லாத ஊர் திருவிழாவையும்,
    உறவினர் திருமணத்தையும்,
    நண்பனின் மரணத்தையும்,
    செல்போனிலும் பேஸ்புக்கிலும் கேட்டு கேட்டு
    வாழ்கையையும், இளமைகாலத்தையும்,
    தொலைத்த அவனை நான்
    எப்படி மீட்டுதருவேன்?

    வீசாவிற்க்கு பணம் கட்டி,
    காதலுக்கு சமாதி கட்டி,
    சூழ்நிலைக்கு தாலிகட்டி,
    வட்டி கட்ட சென்றவனின்
    மனைவியை தவறாகத்தானே
    பார்கிறது இந்த சமூகம்!
    பையன் பக்கத்தில் இல்லை என்றால்
    பக்கத்து வீட்டுகாரன்கூட பகைக்க பார்க்கிறான்

    என் மகன் வந்தால் சென்ட் வியாபாரியாக,
    தைலம் விற்பவனாக,
    ஃபாரின் சரக்கு தருபவனாகதான் பார்க்கிறார்கள்
    ஆனால் என் கண்களுக்கு மட்டும்
    அவன் வாளருந்த பட்டமாகதான்
    தெரிகிறான்

    உங்கள் குழந்தைகளுக்கு குடிப்பதும்,
    புகைப்பதும் குற்றம் என்று சொல்லி தரும் நீங்கள்
    கடன் வாங்குவதும் குற்றம் என்று சொல்லிக்கொடுங்கள்

    வட்டிக்கு விடுவது பாவம் என்பார்கள்
    அதை மாற்றி எழுதுங்கள்
    வாங்கியவனே பாவம் என்று…

    0 comments:

    Post a Comment