Saturday 20 September 2014

Tagged Under:

சாப்பிட்டவுடன் செய்யக் கூடாதவை

By: ram On: 07:56
  • Share The Gag
  • வழக்கமாக சிகரெட் புகைப்பவராக இருப்பினும் சாப்பிடவுடன் சிகரட் பிடித்தால் சாதாரண நேரங்களில் புகைப்பதை விட மிகப் பெரிய கெடுதல் ஏற்படும்.


    சாப்பாட்டின் இறுதியில் அல்லது சாப்பிட்டு முடித்தவுடன் பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள் உப்புசம் (Bloated with air) உருவாகும். எனவே சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன் அல்லது பின் பழங்கள் சாப்பிடும் பழக்கமே உகந்தது.


    சாப்பிட்டவுடன் தேநீர் அருந்துதல் கெடுதியானது. ஏனெனில் தேயிலைத் தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவிலுள்ள புரதச்சத்தினைக் கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


    சாப்பிட்ட உடன் சிலருக்கு குளிக்கும் பழக்கம் உள்ளது. குளிக்கும் போது, கை, கால், உடல் பாகங்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இரைப்பைக்கு செரிமானத்திற்குத் தேவையான ரத்த ஓட்டம் குறையும் நிலை ஏற்படும்.


    மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்துத் தூங்கக்கூடாது. உணவுக்குப்பின் குறைந்தது அரைமணி நேரமாவது கழிந்த பிறகே உறங்கச் செல்லவேண்டும்.

    0 comments:

    Post a Comment