Saturday 6 September 2014

Tagged Under:

ஏலம் போன லைட் ஹவுஸ் – இது அமெரிக்க நியூஸ்!

By: ram On: 18:59
  • Share The Gag
  • அமெரிக்காவில் மைன் மாநிலத்தில் யோர்க் கவுன்டி கடற்கரை பிராந்தியமாகும். இங்கிருந்து 6 மைல் தொலைவில் பூன் என்ற சிறிய பாறை தீவு உள்ளது. இங்கு 1855-ம் ஆண்டு 133 அடி உயரத்தில் ஒரு லைட் ஹவுஸ் கட்டப்பட்டது. நியூ இங்கிலாந்து லைட் ஹவுஸ் என இது அழைக்கப்பட்டது. மைன் மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ள 57 லைட் ஹவுஸ்களில், இது கடல் மட்டத்தைவிட உயரமான இடத்தில் அமைந்துள்ளது. இன்றும் இது கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த லைட் ஹவுசை நிர்வகித்து வந்த உள்ளூர் அரசு, கடந்த மாதம் 17-ம் தேதி இதை தனியாருக்கு ஏலம் விட்டது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட போர்ட்லாண்டை சேர்ந்த ஆர்ட் ஜிரார்ட், நியூ இங்கிலாந்து லைட் ஹவுசை 78 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு(ரூ.47 லட்சம்) ஏலத்தில் எடுத்தார்.இந்த லைட் ஹவுசை புதுப்பித்து, சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் மாற்றுவேன். இதன் மூலம், சுற்றுலா பயணிகள் கடலின் அழகை கண்டு ரசிக்கலாம். இதனால், மைன் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று ஜிரார்ட் பெருமையுடன் கூறினார்

    0 comments:

    Post a Comment