Wednesday 3 September 2014

Tagged Under:

பாலியல் உணர்வை அடக்க இதை பண்ணுங்க ..

By: ram On: 23:34
  • Share The Gag
  • பொதுவாக உணர்வு பூர்வமான விஷயங்களை, உதாரணமாக பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன்ற உணர்வுகளை சாந்தப்படுத்த வேண்டும் அல்லது வெளியேற்ற வேண்டும். சாந்தபடுத்துதல் என்றால் நட்போடு அணுகுதல் என்று அர்த்தம். ஆனால் சாந்தபடுத்துதலை விட வெளியேற்றுவதே நல்லது. இதில் ஒரு முறைதான் சிரித்து வெளியேற்றுதல் என்பது.

    பொதுவாக பாலியல் உணர்வுகளை சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாலே அது வேகமாக மேலே கிளம்பி, பிறகு மெல்ல சாந்தமாகி விடும். உதாரமான ஒரு சிறு வயது பையன் மிகவும் துடிப்பாக விளையாட்டுப் பொருட்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறான் அல்லது கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்களை நீங்கள் மூர்க்கமாக அடக்க நினைத்தால் என்ன ஆகும்? அது மேலும் மேலும் கூடிக்கொண்டே தான் போகும் அல்லது அது அடங்கியது போல நடிக்கும்.

    ஆனால் இப்படி விளையாடும் பொழுதும், பேசும்பொழுதும், அவனை சற்று வெறுமனே, எதுவும் கூறாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள். அவன் சற்று போக்கிரித்தனமாக விளையாடுவான். இல்லை மேலும் அசிங்கமாகப் பேசக்கூடும். அந்த எல்லையை அடைந்தவுடன் அவன் கீழே இறங்கித்தான் வரவேண்டும் இல்லையா?

    ஆகவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாலுணர்வைக் கண்டிக்காமல், அடக்காமல் அதன் போக்கை மனக்கண்ணுள் சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருங்கள். இப்படித்தான் அதைச் சாந்தபடுத்த முடியும். இப்படிச் சாந்தபடுத்திய பாலுணர்வுச் சக்தி வேறு வகையில் மெல்ல மாறிவிடும் & விளையாட்டு, டி,வி. பார்த்தல் போன்றவைசகளில்.

    அப்படியும் சாந்தபடுத்த முடியவில்லை என்றால் அதன் போக்கிலேயே நீங்களும் சென்று விடுங்கள்! சில காலம் சென்று அது தானே சாந்தநிலைக்கு வந்து விடும். தேவை உங்களுக்கு விழிப்புணர்வு தான். எதிலும் இயந்திரத்தனமாக செயல்படாதீர்கள். குற்ற உணர்வு தேவை இல்லாதது. 

    0 comments:

    Post a Comment