Saturday 23 August 2014

Tagged Under: ,

டாப் ஆக்டர்களின் ப்ளாப் படங்கள்!

By: ram On: 17:10
  • Share The Gag

  • தமிழ் சினிமாவில் என்ன தான் சின்ன பட்ஜெட் படங்கள் ஓடினாலும் என்றும் உச்ச நடிகர்களுக்காகத்தான் நம் காலரை தூக்குகிறோம். படம் நன்றாக இருக்குமோ? இல்லையோ? அதை நாம் பார்ப்பது இல்லை, என் மனதிற்கு பிடித்த நடிகர் நடித்துள்ளார், அதனால் முதல் நாளே பார்ப்பேன் என்று, பரபரப்பாக போய் பல்ப் வாங்கி வந்த படங்களின் தொகுப்பு தான் இந்த பகுதி.

    ரஜினி

    எஸ் சூப்பர் ஸ்டார் இஸ் பேக்..அப்படின்னு சொல்லிட்டு படையப்பா படத்திற்கு பிறகு 300 வருஷத்துக்கு பிறகு வந்த படம் தான் பாபா. ஆனால் படத்தை பார்த்த பலரும் சின்ன குழந்தையாக மாறி பாம்பு வர சீனுக்கும், பட்டம் பறக்குற சீனுக்கும் கைத்தட்டி சோகமாக வெளிவந்தது தான் மிச்சம்.

    கமல்

    என்ன படம் இது, என்ன பேசுறாங்கனு கொடைக்கானல்ல ரூம் போட்டு யோசிச்சாலும் தற்போது வரை தெரியவில்லை. கமல் படம் காமெடி எல்லாம் லேட்டா தான் புரியும், அப்படின்னு சொல்வாங்க, ஆனா இந்த படத்துல வந்த காமெடியெல்லாம் த்ரிஷா அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் வரை யாருக்கும் புரியபோவதில்லை.

    அஜித்

    அஜித் தோல்வி படங்களை கொடுத்துள்ளார், ஆனால் அதற்கெல்லாம் ‘கீரிடம்’ வைத்தார் போல் வெளிவந்த படம் தான் ஆழ்வார். சத்தியமா தற்போது வரை இந்த படத்தில் ஒரு காட்சி கூட யாருக்கும் நினைவில் இருக்காது. நினைவில் உள்ள ஒரே காட்சி அஜித் சாமி வேஷம் போட்டது தான். அதுவும் கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டியது.

    விஜய்

    விஜய்யின் 50வது படம், மாஸ் தான் என்று தாரை தப்பட்டை எல்லாம் ரெடி செய்து அவரது ரசிகர்கள் தியேட்டருக்கு சென்ற போது விஜய்யின் எண்ட்ரியே அவர்களை கொஞ்சம் சோதித்துவிட்டது. அதை தொடர்ந்து பல காட்சிகளில் கனத்த இதயத்துடன் ரசிகர்கள் படம் பார்த்தனர்.

    சூர்யா

    சூர்யா என்றாலே படம் நன்றாக தான் இருக்கும், நம்பி திரையரங்கிற்கு செல்லலாம் என்று நினைத்த ரசிகர்களுக்கு மாற்றான் பெரிய அடி தான். இப்படத்தின் தோல்விக்கு காரணமே படத்தின் நீளம் தான். முதல் காட்சிக்கு சென்றவர்கள் 2 நாள் கழித்து தான் இடைவேளைக்கே பாஃப்கான் வாங்க வந்துள்ளார்கள். ‘என்னது அஞ்சானா?...அட போங்கபா...

    விக்ரம்

    இவர் ஹிட் என்பதை பார்த்ததே கி.மு வாக தான் இருக்கும். பாவம் இவர் என்ன தான் கஷ்ட்டப்பட்டு நடித்தாலும் சில சொதப்பல் வேலைகளால் படம் தோல்வியை தழுவுகிறது. கடந்த 5 வருடங்களில் இவர் கொடுத்த சுமாரான ஹிட் தெய்வத்திருமகள் தான் என்றால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

    சிம்பு

    வெற்றிப்படமா? அது ஒரு சைட் இருக்கட்டும், முதல்ல படத்த ரிலிஸ் பண்ணுங்கபா என்று தான் இவரை சொல்லவேண்டும். இவர் வெற்றி&தோல்வி குறித்து ஆராய நமக்கு வயதில்லை, அதனால் இவரை போட்டியில் சேர்த்துகொள்வதாக இல்லை.

    தனுஷ்

    விக்ரமின் நிழல் என்றே சொல்லாம், கடைசியாக இவர் நடித்த 10 படங்களில் சல்லடை போட்டு தேடினால் கூட ஹிட் படத்தை கண்டுபிடிக்க முடியாது. அதிலும் குறிப்பாக நையாண்டி எல்லாம் பொறுமையை சோதிக்கும், செல்ப் சூசைட் வரிசையில் இடம்பெற்றது. ஆனால் விட்டதை எல்லாம் விஐபி என்றே ஒரே படத்தில் பிடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகார்த்திகேயன்

    ஹே..இவர் எங்கபா பிளாப் கொடுத்தாரு, நடிச்ச எல்லா படமும் தாறு மாறு, தக்காளி சோறு என்று கம்பு சுத்தினாலும் மான்கராத்தே படம் இவரை கொஞ்சம் உலுக்கிவிட்டது. ஆனால் பெரிய தோல்வி ஒன்றும் இல்லை, ஏதோ பிரமோஷனால் பிழைத்துவிட்டார்.

    விஜய் சேதுபதி

    இன்றைய சூழ்நிலையில் மினிமம் கேரண்டி நடிகர் இவர். ஆனால் இந்த வருடம் இவரை சோகத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் நல்ல விமர்சனம் பெற்றாலும், வசூலில் கொஞ்சல் டல் தான்.

    இதுவரை மேலே பார்த்த அனைத்தும் தற்போது முன்னணியில் உள்ள நடிகர்களின் நிலவரம் தான். இதில் எந்த நடிகரையும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்று நினைக்கவில்லை. கண்டிப்பாக இந்த படங்களை எல்லாம் அவரது ரசிகர்களே ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்பது தான் அனைவரின் கருத்து.

    0 comments:

    Post a Comment