Saturday 4 October 2014

Tagged Under:

கம்பிகள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

By: ram On: 08:11
  • Share The Gag
  • கட்டுமானத்தின் வலுவான தூண்களுள் ஒன்றாக விளங்குபவை கம்பிகள். கான்கிரீட் கலவைகளுடன் கலந்து கட்டிடத்தை கம்பீரமாக எழுந்து நிற்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கட்டிடத்தின் ஆயுளை அதிகரிப்பதிலும் கம்பிகளின் பயன்பாடு முதன்மையானதாக இருக்கிறது.

    தரம் முக்கியம்

    ஆகவே கம்பிகளை வாங்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக கம்பிகளை வாங்க அவசரம் காட்டக்கூடாது. அவை தரமற்ற கம்பிகளாக கூட இருக்கலாம். பொதுவாக டி.எம்.டி. கம்பிகள் தான் கட்டுமானத்தில் முதன்மையாக பயன்படுத்தப்படுகின்றன. அவை துருபிடிக்காத வகையில் தயார் செய்யப்படுகின்றன.

    வளையும் தன்மை கொண்டவையாகவும் இருக்கின்றன. எவ்வளவு வளைத்தாலும் எளிதில் உடையாது. அந்த அளவுக்கு வலிமை பொருந்தியதாக இருக்கின்றன. சாதாரண முறுக்கு கம்பிகளை விட பலம் பொருந்தியவையாகவும் விளங்குகின்றன. ஆகையால் டி.எம்.டி. கம்பிகளை கட்டுமானத்துக்கு பயன்படுத்துவது நல்லது.

    ரெடிமேடு கம்பிகள்

    ஏனெனில் சாதாரண கம்பிகள் தரமில்லாதவையாக தயாரிக்கப்பட்டு இருந்தால் அது கட்டிடத்தின் உறுதித்தன்மையை குறைக்கும். சில ஆண்டுகளிலேயே கட்டுமானம் வலிமையை இழந்து விடும். எனவே டி.எம்.டி. கம்பிகளை பயன்படுத்துவதே கட்டிடத்துக்கு நன்மை பயக்குவதாக அமையும். டி.எம்.டி. கம்பிகளை வாங்கும்போதும் அதன் உண்மை தன்மையை விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஏனெனில் டி.எம்.டி. கம்பிகளில் போலிகள் புகுந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் உஷாராக இருக்க வேண்டும். அவை குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பு தானா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தற்போது கம்பிகள் ரெடிமேடாக கிடைக்கின்றன. இக்கம்பிகள் நீண்ட கம்பி          களாக அல்லாமல் வெவ்வேறு அளவுகளில் துண்டுகளாக வெட்டப்பட்டு வளைத்து வைக்கப்படு
    கின்றன.

    குறிப்பாக கட்டுமான பணிக்கு தேவையான அளவுகளில் இவை கிடைக்கின்றன. வழக்கமாக கம்பி களை வாங்கி துண்டுகளாக வெட்டி பயன்படுத்தும்போது சிறு, சிறு துண்டுகள் வீணாகின்றன. இவை கட்டுமானத்துக்கு பயன்படுத்த முடியாமல் போவதால் பணம் விரயமாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ரெடிமேடு கம்பிகளை பயன்படுத்தும்போது அந்த பிரச்சினை எழுவதில்லை.

    கட்டப்படும் அறைகளின் அளவு, உயரத்துக்கு ஏற்ப கம்பிகள் ரெடிமேடாக வெட்டி வைக்கப்படுகின்றன. அவற்றில் தேவையான அளவுகளை தேர்ந்தெடுத்து கட்டுமான பணிக்கு பயன்படுத்தலாம். இதன்மூலம் கம்பிகளை வெட்டி, வளைத்து பயன்படுத்துவதற்கு ஆகும் நேரம் குறைகிறது. கம்பிகளை துண்டுகளாக வெட்டும்போது ஏற்படும் இழப்பும் தவிர்க்கப்படுகிறது.

    உறுதிபடுத்த வேண்டும்

    கட்டுமான பணியையும் விரைவாக முடிக்க ஏதுவாக அமைந்திருப்பதால் இக்கம்பிகளுக்கு மவுசு கூடி வருகிறது. இக்கம்பிகளை வாங்கும்போது திட்டமிட்டு செயல்பட வேண்டும். பீம்கள் அமைப்பதற்கு கம்பிகளின் அளவு வேறாக இருக்கும். மற்ற பயன்பாட்டுக்கும் கம்பிகளின் அளவு வித்தியாசப்     படும். ஆகையால் எந்த பகுதிக்கு எந்த தடிமன் கொண்ட கம்பியை பயன்படுத்த போகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்ப கம்பிகளை வாங்க வேண்டும்.

    அதற்கு கட்டிட வரைபடத்தில் அறையின் அளவை குறிப்பிடும்போது தேவைப்படும் கம்பிகளின் நீளம், தடிமனையும் குறிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கம்பிகளை வாங்குவதற்கு எளிதாக இருக்கும். தேவை இல்லாமல் அதிக எண்ணிக்கையில் வாங்குவதும் தவிர்க்கப்படும். இந்த ரெடிமேடு கம்பிகளை வாங்கும்போது அதன் தரத்தையும் பரிசோதிக்க வேண்டும். அவை தரமானவை தானா? என்பதை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்

    0 comments:

    Post a Comment