Saturday 18 October 2014

Tagged Under:

சர்க்கரை நோயை 3 விதமாக கட்டுப்படுத்தலாம்....கூடுதல் தகவல்..!

By: ram On: 23:00
  • Share The Gag
  • சர்க்கரை நோயை 3 விதமாக கட்டுப்படுத்தலாம்

    1) உணவுக்கட்டுப்பாடு:
    * உணவில் சர்க்கரை சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்திட வேண்டும்.
      உதாரணம் கேரெட்,பீட்ரூட்,உருளை கிழங்கு,வாழைப்பழம்,மாம்பழம்,இனிப்பு     பண்டங்கள்,அரிசியினால் செய்யும் உணவு வகைகளான சாதம்,இட்லி,தோசை,
    இடியாப்பம் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடக்கூடாது.
    * இரவில் கோதுமை, ராகி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
    * கொய்யா,நாவல் பழம்,பேரிக்காய்,வெள்ளரி,நெல்லிக்காய் ஆகியவை சாப்பிடலாம்.
    * ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதை தவிர்த்து 4 அல்லது 5 முறை ஒரு நாளில் குறைவான அளவில் உண்பது நல்லது.

    2) மருத்துவ முறைகள்:

    * ஆவாரை,கொன்றைவேர்,நாவல் கொட்டை,கடலழிஞ்சில்,கோரை கிழங்கு,கோஷ்டம்,மருதம்ப்பட்டை ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து 4 டம்ளர் நீர் சேர்த்து 1 டம்ளர் ஆக வற்றும் வரை காய்ச்சி, தினமும் இரு வேலை குடிக்க,நீரிழிவு நோய் குறையும்
    *தேற்றான் விதை,கடுக்கை தோல்,ஆவாரை விதை,விளாம் பிசின் ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து முதல் நாள் இரவு மோரில் ஊற போட்டு, மறு நாள் காலை அறைத்து பசு மோரில் கலந்து சாப்பிடலாம்.
    * நெல்லிக்காய் சாறு,தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றை தலா 15 மி.லி எடுத்து மூன்றையும் கலந்து காலை மற்றும் சாப்பிட்டு வர இந்நோய் குறையும்.
    * அருகம்புல்லை நிழலில் உலர்த்தி காலையும் மாலையும் வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.
    * இலவமரப்பட்டை-10 கிராம்,கருஞ்சீரகம்-5 கிராம் எடுத்து பொடியாகி,1 ஸ்பூன் மோரில், உணவுக்கு முன் மூன்று வேளை சாப்பிடலாம்.

    3) உடற்பயிற்சி:
    * தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நடை பயிற்சி செய்து வரவும்.
    * இளம் வயதினராயின் ஓட்டப் பயிற்சி, யோகா செய்து வரலாம்.
    * பகலுரக்கதை தவிர்க்க வேண்டும்.

    தடுப்பு முறைகள்:
    * நெல்லிக்காய் சாறு ஒரு மேஜை கரண்டி,பாகற்காய் சாறு 1 மேஜை கரண்டி கலந்து தினமும் காலையில் சாப்பிட, கணையம் தூண்டப்பட்டு, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி, சர்க்கரை வியாதியை தடுக்கலாம்.
    * நெல்லிக்காய் பொடி, நாவல் பழப்பொடி,பாகற்காய் தூள் தலா ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை வெந்நீரில் சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது.
    * தினமும் நடை பயிற்சி , ஓட்ட பயிற்சி செய்தல்.

    0 comments:

    Post a Comment