Thursday 11 September 2014

Tagged Under:

சர்ச்சைக்குள்ளான காந்தி கடிதங்கள்

By: ram On: 20:50
  • Share The Gag
  • மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவில் வசித்தபோது, அவருக்கும் ஜெர்மனை சேர்ந்த யூதரான ஹெர்மன் கேலன்பேக் என்ற கட்டிட கலைஞருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.
    இருவரும் கடிதங்கள் மூலம் தங்கள் நட்பை வளர்த்துக் கொண்டனர்.

    இந்த 50 ஆண்டு காலம் இருவரும் எழுதிய கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் லண்டனை சேர்ந்த ‘சோத்பி’ ஏல நிறுவனத்தால் ஏலத்துக்கு விடப்பட இருந்தது.

    ஆனால், இந்த ஏலம் நடைபெறுவதை தடுத்த இந்திய அரசு, சோத்பி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த மொத்த கடிதங்கள் மற்றும் ஆவணங்களை 1.28 மில்லியன் டாலர் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டது.

    இந்த கடிதங்கள் டில்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

    இந்த கடிதங்களை இந்திய அரசு வாங்கியிருப்பது குறித்த இப்போது சர்ச்சை எழுந்துள்ளது.

    ‘தேசப்பிதாவான காந்தியடிகளின் கடிதங்கள் நம்மிடம் இருக்க வேண்டும் என்று இந்திய அரசு நினைத்ததில் என்ன  தவறு, இதில் எதற்கு சர்ச்சை என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

    பாலியல் கவர்ச்சி

    மகாத்மா காந்தி-ஹெர்மன் கேலன்பேக் ஆகியவர்களுக்கு  இடையே இருந்த நட்பில், பாலியல் ரீதியான கவர்ச்சியும் இருந்ததாக ‘ஜோசப் லெலிவெல்ட்’ என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய  எணூஞுச்ணா குணிதடூ- –ச்டச்ணாட்ச் எச்ணஞீடடி ச்ணஞீ ஏடிண் குணாணூதஞ்ஞ்டூஞு தீடிணாட ஐணஞீடிச்" என்ற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். இது அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

    ‘இந்த காரணத்தால் மகாத்மா காந்தி-ஹெர்மன் கேலன்பேக் ஆகியவர்களுக்கு  இடையே நடந்த சர்ச்சைக்குரிய கடிதங்களை பொதுமக்கள் பார்வைக்கு வராமல் தடுக்கவே இந்த ஆவணங்களை இந்திய அரசு வாங்கியது’ என்று சில ஊடகங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.


    காந்தியின் வாழ்க்கை திறந்த புத்தகம்
    ‘காந்தி தனது வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகம் என்று கூறியிருக்கிறார்.  அவரது சுயசரிதையான ‘சத்திய சோதனை’யில், அவர் பிரம்மச்சார்யம், தனது பாலியல் வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்களை வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

    அப்படி இருக்கும் போது பாலியல் கவர்ச்சி இருப்பதாக கூறப்படும் இந்த கடிதங்கள் குறித்த விவாதமோ, சர்ச்சையையோ காந்தியடிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாது’ என்று காந்தியவாதிகள் கூறுகின்றனர்.

    ‘இந்த ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கும், ஆராச்சியாளர்களின் பயன்பாட்டுக்கும் விடவேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.

    0 comments:

    Post a Comment