Thursday 28 August 2014

Tagged Under: ,

அனுமன் தேடிய “சஞ்சீவினி” மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

By: ram On: 08:10
  • Share The Gag

  • இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது,  ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

    காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

    லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில், இதனை ‘சஞ்சீவினி’ மூலிகை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

    விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.

    இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவியாக இருக்கும், மேலும், ரோடியோலா மூலிகை குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

    0 comments:

    Post a Comment