Friday 1 August 2014

Tagged Under: ,

நகங்களின் வெள்ளை திட்டுகளை சரி செய்ய முடியுமா?

By: ram On: 08:58
  • Share The Gag


  • நகங்களின் மேற்புறம் வெள்ளை வெள்ளையாக திட்டுகள் வந்து பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. அடிக்கடி உடைந்தும் போகிறது. இதைச் சரி செய்ய முடியுமா?

    நகங்கள் வலுவிழந்து போவதற்குக் காரணம் கால்சியம் குறைபாடுதான். அதைச் சரி செய்தாலே பிரச்னை தீர்ந்துவிடும். பிரசவ காலத் திலும் டெலிவரிக்கு பிறகும் கால்சியம் குறைபாடு ஏற்படும். இந்தக் காலங்களில் நகங்களிலும் பாதிப்பு உருவாகும். சத்தான உணவு சாப்பிட வேண்டியது கட்டாயம். நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால், தவிர்த்துவிட வேண்டும். வாரம் ஒரு முறை நீங்களாகவே மெனிக்யூர் செய்து கொள்ளலாம்.

     ஒரு பாத்திரத்தில் வெந்நீர், அரை எலுமிச்சைப் பழத்தின் சாறு, ஷாம்பு, டெட்டால் ஆகியவற்றைக் கலந்து அதில் கைகளை 5 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் நகங்கள் உறுதியாக அழகாக மாறும். நகங்கள் உடைந்து விழாமல் இருக்க ட்ரான்ஸ்பரன்ட் நெயில் பாலீஷை கைகளில் பூசி வரலாம்.

    0 comments:

    Post a Comment